TAMIL

Budget 2025 எதிர்பார்ப்புகள்... செல்போன்கள் விலை குறைய வாய்ப்பு

மத்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா மற்றும் PLI திட்டம் ஆகியவை உள்நாட்டில் மொபைல் உற்பத்தியை ஊக்குவிப்பதில் நிறைய உதவியுள்ளன. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதியும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டு தாயாரிப்பு குறித்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் இந்தியா மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சருடன் நடந்த பட்ஜெட்டுக்கு ( Union Budget 2025) முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன் வைத்தது. இந்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் நாட்டில் தயாரிக்கப்பட்ட போன்களை நாம் மலிவான விலைக்கு வாங்கலாம். உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன் வைத்துள்ள கோரிக்கையில், தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு பாகங்களின் இறக்குமதி வரியைக் குறைக்குமாறு கோரினர். தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் மைக்குகள், ரிசீவர்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் நெகிழ்வான அச்சிடப்பட்ட சர்க்யூட் அசெம்பிளிகள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு தொலைபேசி உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். மேலும் படிக்க | Reliance Jio... 223 ரூபாயில் தினம் 2GB டேட்டா... வாடிக்கையாளர்கள் ஹேப்பி வரிகளை குறைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை தொலைபேசி உதிரி பாகங்கள் மீது தற்போது 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், அதை 10 சதவீதமாக அரசு குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் விரும்புகின்றனர். இதுமட்டுமின்றி, தற்போது 2.5 சதவீத வரி விதிக்கப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு (பிசிபி) உதிரிபாகங்கள் மீதான வரியை நீக்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளனர். கட்டாய சோதனை மற்றும் சான்றிதழில் மானியம் வழங்கவும், கார்ப்பரேட் வரியில் 15 சதவீத விலக்கு நீட்டிப்பு மற்றும் கூறுகளுக்கு தனி கிளஸ்டர்களை உருவாக்கவும் தொலைபேசி உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனா மற்றும் வியட்நாமை விட அதிக வரி மொபைல் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக மாறுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் அதற்கு பெரும் சவாலாக உள்ளன. இந்தியாவில், மொபைல் போன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் மீதான வரி இன்னும் 7 முதல் 7.2 சதவீதம் வரை உள்ளது. இது சீனா மற்றும் வியட்நாமை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | கட்டண விதிகளை திருத்திய TRAI... Voice + SMS பேக் இனி கட்டாயம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.