அதாவது இந்த மாதம் முழுவதும் வீட்டில் உள்ள பெண்கள் காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டு வாசலில் காண்போர் கண்களைக் கவரும் வகையில் பல வண்ணங்களைக் கொண்டு பிரமாண்டமான கோலம் போடுவார்கள். இதிலும் யாருடைய கோலங்கள் அழகாக இருக்கிறது என அப்பெண்களின் மத்தியில் பெரும் போட்டியே ஓடிக்கொண்டிருக்கும். இந்த போட்டியானது தைத் திருநாளான பொங்கல் அன்று, விடிய விடியக் கோலம் போடுவதுடன் தான் முடிவடையும். இதையும் படிங்க: Healthy Vegetable: மட்டன், மீன் எல்லாம் இது முன்ன ஜுஜுபி... உலகின் சக்தி வாய்ந்த காய்கறி பற்றி தெரியுமா... இவ்வாறு ஒரு மாதம் முழுவதுமே வீதியெல்லாம் விழாக்கோலமாக மாற்றும் இந்த வண்ணக் கோலங்களை இடுவதற்குப் பயன்படுத்தப்படும் கலர் கோலப்பொடிகள் கடைகளில் பல வகைகளில் விற்பனை செய்யப்படுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவையெல்லாம் எப்படித் தயாராகிறது என்று தெரியுமா... தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் இந்த மார்கழி மாதம் முழுவதும் கோலப்பொடி தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெறும். இவர்கள் இந்த ஒரு மாதம் மட்டும் தான் இவ்வாறு கலர் கோலப்பொடி தயார் செய்கின்றனர். 30 வகையான கலர் கோலப்பொடி தயாரித்து வருகின்றனர். முதலில் கல் மற்றும் இதர தூசி இல்லாமல் நன்கு பொடி மணலாக சலித்தெடுத்துக் கொள்கின்றனர். பின்னர் அந்த மணலில் சிறிதளவு வண்ணங்களைச் சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு மணல் முழுவதும் வண்ணங்களாக மாறும் வரை மிக்ஸ் செய்கின்றனர். பின்னர் அதனை வெயிலில் நன்கு காய வைத்து, மீண்டும் அதனை சலித்தெடுத்து கோலப்பொடியாக தயாரிக்கின்றனர். இதையும் படிங்க: DHS Recruitment: 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை... ரூ.60,000 வரை சம்பளம்... டிச.31 தான் லாஸ்ட்... அதுமட்டுமின்றி தண்ணீர் ஊற்றாமல் இருவகையான வண்ணங்களை வெறும் மணலில் சேர்த்து நன்கு கிளறி, அதனில் இருந்தும் புது வண்ணங்களும் தயாரிக்கின்றனர். மணலில்லாமல் வெள்ளை கோலப்பொடியிலும் வண்ணங்களைக் கலந்து கலர் கோலப்பொடி தயாரிக்கின்றனர். இது குறித்து வியாபாரி உமாமகேஸ்வரி கூறுகையில், "வருடத்திற்கு ஒருமுறை இந்த மார்கழி மாதம் முழுவதும் இந்த கோலப்பொடி வியாபாரம் செய்வது வருவோம், பொங்கல் பண்டிகை வருவதால் இந்த மாதம் வியாபாரம் நன்கு விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. 30 வகையான வண்ணங்களைத் தயாரிக்கின்றோம், வெள்ளை கோலப்பொடியிலும் வண்ணங்கள் சேர்த்து கலர் கோலப்பொடி தயாரிப்போம், நேரடியாக மணலைக் கொண்டும் வண்ணக் கோலப்பொடி தயாரிப்போம். அதிலும் பல வகைகள் இருக்கிறதும், அது வண்ணங்களைப் பொருத்து வேறுபடும். இதில் எங்களுக்கு நாங்கள் போடும் முதலீடே லாபமாக வந்துவிடும். பெரிதளவில் நஷ்டம் ஏதும் ஏற்படாது" எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
2025-ல் அதிகரிக்க உள்ள மேகி நூடுல்ஸின் விலை.. எவ்வளவு, ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 22, 2024
வீதியெங்கும் வர்ண ஜாலம் செய்யும் கோலங்கள்... வண்ண வண்ண கோலப்பொடி தயாராவது இப்படி தான்...
December 23, 2024What’s New
Spotlight
Today’s Hot
எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!
- By Sarkai Info
- December 16, 2024
Featured News
Latest From This Week
ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் எதுவரை இருந்தால் டிக்கெட் உறுதியாகும்? - சிறிய கணக்கு இதோ..!
BUSINESS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.