BUSINESS

பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்த தொழில்... 20 வயதில் சாதித்து காட்டிய இளம் தொழிலதிபர்!

கொரோனா லாக்டவுன் பலரது வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு புரட்டி போட்டு விட்டது. ஒரு சிலருக்கு இது மோசமான கால கட்டமாக இருந்தாலும், ஒரு சிலருக்கு நல்ல விதமாக அமைந்துவிட்டது. அந்த வகையில் உதய்பூரை சேர்ந்த டிக்விஜய் சிங் என்பவர் யூடியூப் மூலமாக சாக்லேட் செய்வது எப்படி என்பதை கொரோனா லாக்டவுன் சமயத்தில் கற்றுக் கொண்டுள்ளார். வெறும் 20 வயது மட்டுமே ஆன டிக்விஜய் தான் கற்றுக் கொண்ட இந்த சாக்லேட்டை தொழிலாக மாற்றி தற்போது 1 கோடி ரூபாய் மதிப்பிலான பிசினஸை நடத்தி வருகிறார் மேலும் தன்னுடைய ப்ராடக்டுகளை ‘Saraam’ என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகிறார். இவருடைய நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் சாக்லேட்டுகளை விற்பனை செய்து வருகிறது. டிக்விஜய் சிங்கின் ஊக்கமளிக்கும் இந்த வெற்றிக்கான பயணத்தை பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாம். தன்னுடைய பேஷன் எப்படி ஒரு பிசினஸாக மாறியது என்பதை கதையாக டிக்விஜய் விவரிக்கிறார். கோவிட் சமயத்தில் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கொண்டிருந்த சமயத்தில் தான் இவையெல்லாம் ஆரம்பித்துள்ளது. பலர் இந்த சமயத்தில் புதுப்புது ஹாபிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவரான விஜய் தாமும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தார். பல்வேறு விஷயங்களை முயற்சி செய்து இறுதியாக வீட்டில் சாக்லேட் செய்யலாம் என்று முடிவு செய்தார். அப்போது 16 வயதாக இருந்த அவர் எடுத்த இந்த சிறிய முயற்சி தற்போது ஒரு பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. இப்போது இவர் ‘Saraam’ என்ற பிராண்ட் பெயரில் சாக்லேட் தொழிலை நடத்தி வருகிறார். இதையும் படிக்க: வீட்டுக் கடன் நிலுவையில் இருக்கும்போது வீட்டை விற்க முடியுமா..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க! டிக்விஜய் நல்ல தரமான சாக்லேட்டுகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார். இதுவரை இவர் 2 டன்களுக்கும் அதிகமான சாக்லேட்டுகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கிறார். டெல்லி, பெங்களூரு, உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் இவருக்கு கஸ்டமர்கள் உள்ளனர். உள்ளூர் பழங்கள் மற்றும் நாவல் பழம், குங்குமப்பூ மற்றும் பெர்ரி பழங்கள் போன்றவற்றை பயன்படுத்தி இவருடைய சாக்லேட்டுகளுக்கு இவர் தரும் தனித்துவமான ஃப்ளேவரே இவருடைய சாக்லேட்டை பிறவற்றிலிருந்து வேறுபடுத்தி வித்தியாசமாக காட்டுகிறது. உதய்பூரில் உள்ள ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த டிக்விஜய் எப்பொழுதும் ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டவர். கோவிட் சமயத்தை இவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சாக்லேட் செய்வதை தேர்ந்தெடுத்துள்ளார். தன்னுடைய இந்த ஐடியாவை மகாவீர் சிங் என்ற அவருடைய சகோதரனுடன் பகிர்ந்துள்ளார்.த அவரும் இவருடைய பிசினஸில் இணைவதற்கு ஆர்வம் காட்டியுள்ளார். அந்த சமயத்தில் டிக்விஜய் மற்றும் மகாவீர் ஆகிய இரண்டு பேருக்குமே சாக்லேட் செய்வதில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லை. எனினும் யூடியூப் உதவியுடன் டிக்விஜய் சாக்லேட்டுகளை எப்படி செய்வது என்பதை கற்றுக்கொண்டு, அதனை தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்துள்ளார். தீபாவளி அன்று டிக்விஜயின் தந்தை ஒரு காரை வாங்கியுள்ளார். அப்பொழுது அந்த காருக்கு ஒரு சாக்லேட் பாக்ஸ் கிஃப்டாக கிடைத்திருந்தது. ஒவ்வொரு காரை விற்பனை செய்யும் பொழுதும் அதனுடன் ஒரு சாக்லேட் பாக்ஸை கொடுக்கும் பழக்கத்தை ஷோரூம் ஓனர் கொண்டு இருந்திருக்கிறார். இதையும் படிக்க: இந்தியாவின் டாப் பணக்கார பெண்கள்.. முக்கிய இடம் பிடித்த சென்னை பெண்.. யார் தெரியுமா? இதனை அடுத்து பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் கார் ஷோரூம்களில் தன்னுடைய ஹோம்மேடு சாக்லேட்டுகளை விற்பனை செய்வது சம்பந்தமாக அவர்களை சந்தித்துள்ளார் டிக் விஜய். 2021ல் ஒரு கார் ஷோரூமில் இருந்து இவருக்கு 1000 சாக்லேட்டுகள் செய்து கொடுக்கும்படி முதல் ஆர்டர் கிடைத்துள்ளது. அந்த வருடமே தன்னுடைய சாக்லேட்டுகளுக்கு ‘Saraam’ என்ற பிராண்ட் பெயரை கொடுத்தனர். பொழுதுபோக்குக்காக இவர் ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது 1 கோடி ரூபாய் வருமானத்தை இவருக்கு ஈட்டி வருகிறது. தன்னுடைய சாக்லேட்டுகளுக்கு தேவையான கோகோவை தென்னிந்தியாவிலிருந்து டிக் விஜய் பெறுகிறார். அதிலும் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பெறுகிறார். மேலும் பழங்களை உதய்பூர் மற்றும் கேரளாவில் உள்ள கோக்குமிலிருந்து பெற்று வருகிறார். இவருடைய சாக்லேட்டுகளை Saraam வெப்சைட் மற்றும் இன்ஸ்டாகிராம் பேஜ் மூலமாக ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூரில் இவருடைய கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.