BUSINESS

கோரை புல் சாகுபடியில் பலே லாபம்... ₹40 ஆயிரம் முதல் ₹45 ஆயிரம் வரை வருமானம் கொட்டும் கோரை புல்...

கோரை புல் சாகுபடி கோரைப் புல் சாகுபடி என்பது ஒரு வணிகரீதியான விவசாயச் செயல்முறை ஆகும். இதைப் பல்வேறு பயன்பாடுகளுக்காக வளர்க்கின்றனர், குறிப்பாக பாய் மற்றும் கம்பளம் போன்ற பொருட்களைத் தயாரிக்கக் கோரைப் புல் பயன்படுத்தப்படுகிறது. கோரைப் புல் பொதுவாக நன்னீர் பகுதிகளில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வளர்கிறது. நன்செய் பகுதியில் அதிகமாக நெல், வாழை ஆகியவை பயிரிடப்படும் நிலையில் காவிரியை ஒட்டியுள்ள பரமத்தி, கரூர், மோகனுர் என காவிரி பாசனப் பகுதிகளில் அதிகளவில் கோரை சாகுபடி நடைபெற்று வருகிறது. நெல், வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற நன்செய் பயிர்களை விட்டு எதற்குக் கோரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. கோரைக்கு எப்போதும் தண்ணீர் நிற்க வேண்டும். மேலும், தண்ணீர் பாய்ச்சலையும், காய்ச்சலையும் தாங்கக்கூடியது கோரை. எவ்வளவு தண்ணீர் நின்றாலும் தாங்குவதுடன், தண்ணீரின்றி வறண்டு போனாலும் தாங்கக் கூடியது கோரை. இதனை ஆடு, மாடுகள் மேயாது. திருடு போகாது, எந்த பருவத்திலும் சாகுபடி செய்யலாம். ஒரு முறை கோரை சாகுபடி செய்துவிட்டால் 10, 15 ஆண்டுகள் வரை அதனை வைத்து வருவாய் ஈட்டலாம். வியாபாரிகள் நம் வீடு தேடி வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். நிலத்தை உழவு செய்து, வரப்பு வெட்டி நெல்லுக்குத் தயார் செய்வது போல வயலைப் பண்படுத்திக் கொடுத்து விட்டால், வியாபாரிகளே கோரைக்கிழங்கு நட்டுக் கொடுத்து விடுவார்கள். இதையும் வாசிக்க: TNPSC Exam Group 2 : இலவச பயிற்சி… ஈஸியா பாஸ் ஆகலாம்… இந்த ஆவணங்கள் மட்டும் போதும்… அறுவடைக்காக 10 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒரு கட்டு கோரை ரூ.900 முதல் ரூ.1,200 வரை விலை போகிறது. ஒரு கட்டில் 25 முதல் 30 கிலோ வரை கோரை இருக்கும். ஒரு ஏக்கரில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். அதன் பின் களை எடுப்பது, உரம் வைப்பது ஆகிய பணிகளை மட்டும் மேற்கொண்டால் 6 மாதங்களுக்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து அறுவடை செய்து கொள்வார்கள். புகழ்பெற்ற பாய் தயாரிக்கக் கோரைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கோரை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.