BUSINESS

ரீசார்ஜ் பிளானை அதிரடியாக மாற்றிய பிஎஸ்என்எல் நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதத்தில் தங்களது ரீசார்ஜ் பிளானுக்கான விலையை 15% உயர்த்தியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் என இரு தரப்பு வாடிக்கையாளர்களுமே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இந்த விலையேற்றத்தின் காரணமாக பல்வேறு வாடிக்கையாளர்களும் இந்தியாவின் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு தங்களை மாற்றிக் கொண்டார்கள். பிஎஸ்என்எல் குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்களை வழங்குவது இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் ஏர்டெல் மற்றும் ஜியோவை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் தன்னுடைய ரூபாய் 485 ரீசார்ஜ் பிளானுக்கான வேலிட்டிட்டியை குறைத்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூபாய் 485 க்கு ரீசார்ஜ் செய்தால் 82 நாட்கள் வரை வேலிடிட்டியை அளித்து வந்தது. தற்போது 82 நாட்கள் வேலிடிட்டி என்பதை 2 நாட்கள் குறைத்து 80 நாட்கள் மட்டுமே அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு முன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒட்டு மொத்தமாக 80 நாட்கள் வேலிட்டிட்டியுடன் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது சுருக்கமாக கூறினால், ரீசார்ஜ் பிளானிங் வேலிடிட்டியை 2 நாட்கள் குறைத்து கூடுதலாக 40 ஜிபி டேட்டாவை அதே விலைக்கு பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. சிலருக்கு இது சாதகமாகவும் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். இதையும் படிக்க: கிரெடிட் கார்டு யூஸ் பண்ணறவங்க இந்த 10 ட்ரிக்ஸ தெரிஞ்சு வைச்சுகோங்க.. உங்களுக்கு லாபம் அதிகரிக்கும் தற்போதைய நிலவரப்படி பிஎஸ்என்எல் ரூபாய் 485 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது. இதற்கான வேலிடிட்டி 80 நாட்களாகும். மேலும் பிஎஸ்என்எல் சமீபத்தில் தான் தன்னுடைய 4ஜி நெட்வொர்க்கை கவரேஜ் விரிவாக்கம் செய்ததை தொடர்ந்து, அருணாச்சலம் பிரதேச மாநிலத்தின் மலப்பூ எனும் இடத்தில் இருந்து 14 6500 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக்கின் போப்ராங் என்னும் இடம் வரையில் தன்னுடைய கவரேஜ் அதிகரித்துள்ளது. மேலும் இந்திய தொலைதொடர்பு துறையும் இந்த விரிவாக்கத்தை உறுதி செய்துள்ளது. இனி பிஎஸ்என்எல் 4ஜி சேவையானது அருணாச்சல பிரதேசம் மலப்பு பகுதியில் உள்ள அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும். மேலும் சமீபத்தில் இந்தியாவின் முதன் முதலில் போன் கால் செய்யப்பட்ட கிராமமான நபியில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் வரவை சிறப்பித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. இதையும் படிக்க: கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும்..? பலரும் செய்யும் ஒரே தவறு இதுதான் உத்தரகாண்டில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் இதற்கு முன் தொலைதொடர்பு சேவைகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பிஎஸ்என்எல் இந்த நெட்வொர்க் கவரேஜ் விரிவாக்கத்திற்கு பின் இந்தியாவின் 98 சதவீத பகுதிகள் நெட்வொர்க் கவரேஜிற்குள் வந்துள்ளன. இதில் தொலைதூர மலை பிரதேசங்களும் அடக்கம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.