TAMIL

20 வயதில் ‘இதை’ செய்தால் 60 கஷ்டமே தெரியாது! என்ன செய்யனும் தெரியுமா?

Healthy Habits To Develop In Your 20s : யாருக்குதான் தன் வாழ்நாள் முழுவதும் இளமையாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்காது? இந்த தலைமுறையை சேர்ந்த பலர், 20-30 வயதிலேயே தகாத பழக்கங்களால், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்த வயதிலேயே, புதுப்புது நோய்களால் ஆட்கொள்ளப்படும் இவர்கள், வயதானால் என்ன செய்வர் என்பது நமது முந்தைய தலைமுறையின் அழுகுரலாக இருக்கிறது. வயதானாலும், முதுமையினால் அவதிப்படாமல் இருக்க, நமது 20களிலேயே சில பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவை என்ன பழக்கங்கள் தெரியுமா? தினசரி உடற்பயிற்சி: நம்மில் பலர் செய்யும் தவறு, உடலுக்கு உழைப்பு கொடுக்காமல், எளிதான வேலைகளும் மட்டும் செய்வது. இளமையாக இருப்பவர்கள், இப்போதே கார்டியோ உடற்பயிற்சிகள், வெயிட் ட்ரெயினிங் உள்ளிட்ட பயிற்சிகளை எடுக்க வேண்டும். இது, நமது தசையை பாதுகாப்பதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகள்: பரபரப்பான உலகில், ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும் நாம் துரித உணவுகள் மற்றும் கடை உணவுகளுக்கு அடிமையாகி கிடக்கிறோம். அதை விடுத்து, ஊட்டச்சத்து நிறைந்த முழு தானியங்கள், புரதச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். சரியான தூக்கம்: அனைவரது உடலுக்கும் 7-8 மணி நேர தூக்கம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. சரியான தூக்கம் இல்லை என்றால், அங்கிருந்தே பல நோய் பாதிப்புகள் ஆரம்பித்து விடும். எனவே, தினமும் 7-8 மணி நேரம் உறங்குவதை முதன்மைப்படுத்த வேண்டும். தீய பழக்கங்கள்: மதுப்பழக்கம், போதை பழக்கம், சிகரெட் புகைப்பது, உடனடி மனநிறைவை தருமே அன்றி, பல ஆண்டுகள் அதையே செய்து கொண்டிருந்தால் நம் உயிரை பறிக்கும் எமனாக மாறிவிடும். எனவே, உங்கள் இளமைக்காலம் மட்டுமன்றி, வாழ்க்கை முழுவதும் இவற்றிடம் இருந்து தள்ளியிருங்கள். நிதி கட்டுப்பாடு: நீங்கள் சம்பாதிக்கும் தொகையை சேமிப்பதோடு மட்டுமன்றி அதை எதில், எங்கு, எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். மியூசுவல் ஃபண்ட்ஸ், பங்குச்ச்சந்தை மற்றும் பென்சன் திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டு, இளமைகாலத்தில் இருந்தே அதில் முதலீடு செய்ய தொடங்க வேண்டும். கடன்: படிப்பதற்காக, திருமணத்திற்காக , வெளிநாடு செல்வதற்காக என சில காரணங்களுக்காக வங்கிக்கடன் பெற்றிருந்தால், அதை இளமை காலத்திலேயே அடைத்து விடுங்கள். உங்களது செலவுகளை ஆராய்ந்து, தேவையற்ற விஷயங்களுக்கு பணம் செலவழிப்பதை நிறுத்த வேண்டும். அவசரகால நிதி: 3-6 மாதத்தின் வருமானத்தை அவசர்கால நிதியாக சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அது, திடீர் மருத்துவ தேவைகளுக்கு உதவலாம். மேலும் படிக்க | ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..! ஆச்சரியமாக இருக்கா? மனநலன்: தியானம், யோகா செய்து உங்கள் மனதை உறுதிப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். இளமை காலத்தில் சந்தித்ததை விட, அதற்கு அடுத்தடுத்து வரும் காலங்களில், பல விதமான பிரச்சனைகள் வரலாம். நீங்கள் உங்களது உணர்ச்சிகளை எப்படி கையாள்கிறீர்கள் என்பதையும், சவால்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் மனநலன் ஏற்கனவே பெரும் பிரச்சனையில் இருந்தால், இதற்கு மேல் தாமதிக்காமல் உடனடியாக மன நல மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லதாகும். உறவுகள்: உங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உறவு, வாழ்வு முழுவதும் வர வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள், உங்களுக்கு கடைசி வரை உணர்ச்சி ரீதியாக ஆதரவு கொடுப்பவர்களாக இருப்பர். மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனா பரிந்துரைக்கும் 6 சிந்தனையை தூண்டும் புத்தகங்கள்!! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.