TAMIL

PM Awas Yojana: சொந்த வீடு கட்ட ரூ. 2.5 லட்சம் கிடைக்கும்... விண்ணப்பிக்கும் செயல்முறை இதோ

PM Awas Yojana: நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசாங்கம் பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் மலிவான விலையில் வீட்டு வசதியை அளிக்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மிக முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். இன்றும் நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிலையான வீடுகளை அளிக்க, மோடி அரசு ஏழை மக்களுக்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்குகிறது. PM Awas Scheme பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் உதவியுடன், லட்சக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளை கட்ட முடியும். இந்திய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2015-ல் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட கடன் வாங்கினால், மானியம் கிடைக்கும். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க, வாங்க அல்லது வாடகைக்கு எடுக்க நிதியுதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. PMAY 2.0ன் கீழ் மத்திய அரசாங்கம் 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.30 லட்சம் நிதி மானியம் வழங்கப்படும். முதல் கட்டத்தில், 1.18 கோடி வீடுகளுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 85.5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் தகுதியான பயனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதே பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். Pradhan Mantri Awas Jojana: பிரதமர் வீட்டு வசதித் திட்டம், முக்கிய விஷயங்கள் - மத்திய அரசின் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் 2.0 கட்டத்தில் புதிய வீடுகள் கட்டப்படும். - ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படும். - இந்த திட்டத்தில் பல அம்சங்களை சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. - இது பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம் (BLC), மலிவு வாடகை வீடுகள் மற்றும் வட்டி தள்ளுபடி திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கும். - இந்த அனைத்து நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால், இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் ஒரு வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். - விண்ணப்பித்த பிறகு, உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். மேலும் படிக்க | Budget 2025: அந்த குட் நியூஸ் வருகிறதா? EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்? PMAY 2.0: இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? - இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, நீங்கள் முதலில் இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான -க்கு செல்ல வேண்டும். - இதற்குப் பிறகு, PMAY-U2.0 விருப்பத்திற்கு விண்ணப்பிக்க முகப்புப் பக்கத்தில் கிளிக் செய்யவும். - அனைத்து வழிகாட்டுதல்களையும் கவனமாகப் படிக்கவும். - ஆண்டு வருமானம் மற்றும் பிற தகவல்களை வழங்கவும். - உங்கள் சரிபார்ப்பை செய்ய வேண்டும். - அதன் பின்னர், ஆதார் அட்டை விவரங்களை சரிபார்க்க வேண்டும். - முகவரி, வருமானச் சான்று மற்றும் தேவையான பிற தகவல்களை விண்ணப்பத்தில் நிரப்ப வேண்டும். - அதன் பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கும் முன் ஒரு முறை அனைத்து விவரங்களையும் கவனமாக படிக்கவும். - விண்ணப்ப நிலையை போர்ட்டலில் காணலாம். விண்ணப்பதாரர்கள், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த பிறகு, தங்கள் விண்ணப்பங்களின் நிலையை அவ்வப்போது போர்ட்டலில் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். PMAY 2.0: விண்ணப்பிக்க இந்த ஆவணங்கள் தேவை - விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள் - செயலில் உள்ள வங்கிக் கணக்கு மற்றும் அதன் விவரங்கள் (இது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்) - வருமான சான்றிதழ் - பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (SC/ST/OBC) சாதி/சமூகச் சான்று சான்றிதழ் தேவை. - நில ஆவணங்கள் (சொந்த நிலத்தில் கட்ட நிதி உதவிக்கு விண்ணப்பித்தால்) மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி வந்துவிட்டதா? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.