TAMIL

Budget 2025: அந்த குட் நியூஸ் வருகிறதா? EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்?

Budget 2025 : மத்திய பட்ஜெட்டுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வெறு துறையினர் தங்களது கோரிக்கைகளை நிதி அமைச்சருக்கு அனுப்பி வருகின்றனர். பட்ஜெட் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Union Budget 2025: நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அவர் இந்த ஆண்டு வெளியிடும் அறிவிப்புகள் யாரையெல்லாம் மகிழ்விக்கும் என்பது பட்ஜெட் நாளில்தான் தெரியும். எனினும், இதற்கிடையில், தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை நிதியமைச்சர் பட்ஜெட்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இந்த அறிவிப்பு பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். Wage Ceiling Hike: EPF ஊதிய உச்ச வரம்பில் மாற்றம் இருக்கலாம் வருங்கால வைப்பு நிதியின் (பிஎஃப்) சம்பள வரம்பை (ஊதிய உச்சவரம்பு வரம்பு) அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கலாம் என தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. EPF இன் இந்த வரம்பு இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அப்போது வரம்பு ரூ.6500 -இலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. ஊதிய உச்ச வரம்பை மாற்றுவதற்கான வரைவை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎஃப் வரம்பை 21000 ரூபாயாக உயர்த்தும் திட்டம் உள்ளது. ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) வரம்பு 2017 முதலே ரூ.21,000 ஆக உள்ளது. இரண்டு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வரம்புகளையும் ஒரே மாதிரியாக மாற்ற அரசு விரும்புகிறது. EPFO மற்றும் ESIC இரண்டும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரம்பை அதிகரிப்பதால் அதிகமான மக்களை வரம்பிற்குள் கொண்டுவர முடியும் இபிஎஃப் இன் தற்போதைய ஊதிய உச்சவரம்பு ரூ.15 ஆயிரமாக உள்ளது. இதை 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்தினால் நிதிச்சுமை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், இது ரூ 21000 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு EPFஐத் தேர்ந்தெடுப்பது விருப்பத்தை பொறுத்தது. வரம்பு அதிகரித்தால் அதிகமானோர் இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், வரவிருக்கும் பட்ஜெட்டில் தற்போதைய வரம்பு அதிகரிக்கப்பட்டால், இந்தத் திட்டத்தின் கீழ் வரும் புதிய ஊழியர்களின் சம்பள அமைப்பில் சில மாற்றங்களைக் காணலாம். மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி வந்துவிட்டதா? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வரம்பை அதிகரிப்பதால் என்ன பயன்? - EPF இன் கீழ் சம்பள வரம்பை நேரடியாக அதிகரிப்பதால் பணியாளர்களின் இபிஎஃப் கணக்கு (EPF Account) மற்றும் ஓய்வூதியக் கணக்கிற்கு அதிக பணம் வரும் என்று அர்த்தம். - இதன் மூலம் இபிஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) பங்களிப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல், முதலாளியும் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். - PF இன் கீழ் சம்பள வரம்பை அதிகரிப்பதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். - ஏனெனில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை உள்ளது. - இந்த வரம்பை அதிகரிப்பதன் நிதி தாக்கம் அரசு மற்றும் தனியார் துறையில் இருக்கும். தற்போதைய விதிகள் என்ன? ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், அந்த நிறுவனம் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் ( EPF ) பதிவு செய்யப்பட வேண்டும். அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி உட்பட மாதம் 15,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இந்த நிதியில் 12% பங்களிக்க வேண்டும். அவர்களது நிறுவனமும் இந்த நிதிக்கு சமமாக பங்களிக்கிறது. பணியாளரின் பங்களிப்பு முற்றிலும் EPFக்கு செல்கிறது. நிறுவனத்தின் அல்லது அமைப்பின் 12% பங்களிப்பில், 3.67% EPF க்கும், 8.33% EPS, அதாவது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கு செல்கிறது, EPF கணக்குகளை யார் நிர்வகிக்கிறார்கள்? வருங்கால வைப்பு நிதியானது மத்திய அறங்காவலர் வாரியத்தால் (CBT) நிர்வகிக்கப்படுகிறது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் சேர்ந்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த வாரியம் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியத் திட்டம் மற்றும் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வாரியத்துடன் ஒருங்கிணைந்து அனைத்து செயல்பாடுகளையும் கவனிக்கிறது. EPFO நாடு முழுவதும் 120க்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டுள்ளது. EPFO தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும் படிக்க | புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.