TAMIL

EPF கணக்கில் வட்டி வந்துவிட்டதா? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ

EPF Interest Amount: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனியார் துறை ஊழியர்களின் இபிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கின்றது. இபிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கு தற்போது 8.25 சதவிகித வட்டி கிடைக்கின்றது. இந்த வட்டி வருடத்திற்கு ஒருமுறை வரவு வைக்கப்படுகின்றது. EPFO முதலீட்டிற்கு ஒரு நல்ல வழியாக பார்க்கப்படுகின்றது. பணியாளர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. பணியாளர்கள் செலுத்தும் தொகை முழுவதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனம் செலுத்தும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும் ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது. ஓய்வுக்குப் பிறகு, இதில் ஒரு பகுதி ஊழியருக்கு மொத்தத் தொகையாகவும், மற்றொரு பகுதி ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. EPF Interest EPFO ​​திட்டத்தில் அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது. தற்போது EPFO ​​8.25 சதவீத வட்டியை வழங்குகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆண்டுதோறும் வட்டி பணத்தை செலுத்துகிறது. வட்டித் தொகை EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. EPFO உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக வட்டித் தொகைக்காக காத்திருந்தனர். இப்போது இந்த காத்திருப்பு முடிந்துவிட்டது. EPF வட்டித் தொகையை டெபாசிட் செய்துள்ளது. EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டித்தொகை EPFO கடந்த நிதியாண்டின் வட்டியை வரவு வைத்துள்ளது. உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Amount) வட்டித் தொகை வந்துவிட்டதா என்பதை எளிதாக செக் செய்யலாம். இபிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை எப்படி செக் செய்வது? இதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த விவரத்தை இங்கே காணலாம். How To Check EPF Balance: இபிஎஃப் கணக்கு இருப்பைச் சரிபார்க்க சில எளிய வழிகளை இங்கே காணலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகளில் இருப்பை சரிபார்க்க முடியும்: - ஆன்லைன் (உமங் செயலி, இணையதளம்) - ஆஃப்லைன் (மிஸ்டு கால், எஸ்எம்எஸ்) UMANG App: உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி? - உங்கள் ஸ்மார்ட்போனில் UMANG செயலியை நிறுவவும். - பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உதவியுடன் லாக் இன் செய்யவும். - இதற்குப் பிறகு, ‘வியூ பாஸ்புக்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். - அதன் பிறகு உங்கள் PF கணக்கு இருப்பு திரையில் காண்பிக்கப்படும். டெபாசிட் தொகை மற்றும் தேதியை இங்கே பார்க்கலாம். மேலும் படிக்க | புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது EPFO Portal: இபிஎஃப்ஓ போர்டல் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி? - EPFO இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்லவும். - பணியாளர்கள் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். - அதன் பிறகு UAN மற்றும் கடவுச்சொல் உதவியுடன் லாக் இன் செய்யலாம். - லாக் இன் செய்த பிறகு, ‘உறுப்பினர் பாஸ்புக்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். - கணக்கு பாஸ்புக்கைப் பார்க்க, மீண்டும் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். - அதன் பிறகு உறுப்பினர் பாஸ்புக் திரையில் காண்பிக்கப்படும். Missed Call: மிஸ்டு கால் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி? - மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் சரிபார்க்கும் வசதியையும் EPFO ​​வழங்கியுள்ளது. - இபிஎஃப் இருப்பைச் சரிபார்க்க, யுஏஎன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். - அதன் பிறகு மொபைல் எண்ணில் ஒரு செய்தி வரும். - அதில் கணக்கு இருப்புத் தகவல் இருக்கும். SMS: எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி? - இபிஎஃப் ச ந்தாதாரர்கள் (EPF Suscribers) மெசேஜ் மூலமாகவும் சமீபத்திய கணக்கு இருப்பை தெரிந்துகொள்ளலாம். - இதற்கு ‘UAN EPFOHO ENG’ என்று எழுதி 7738299899 என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்ய வேண்டும். - 'ENG' என்பது மொழி விருப்பத்தை குறிக்கிறது (உதாரணமாக, ஆங்கிலம்). தமிழில் செய்தியை பெற EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும். - மெசேஜ் அனுப்பிய பிறகு, அதன் ரிப்ளையில் பிஎஃப் கணக்கு இருப்பு பற்றிய விவரங்கள் அனுப்பப்படும். மேலும் படிக்க | ரேஷன் கார்ட் இல்லாமலே... பொருள்களை ஈஸியாக வாங்க முடியுமா? அட இது உங்களுக்கு தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.