TAMIL

விமான நிலையத்தில் இனி இந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல முடியாது..!

Airport Rules India | விமான பயணத்தை பாதுகாப்பாக மாற்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, துபாய் செல்லும் விமான பயணிகள் இந்த விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வளவு நாட்கள் மருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அந்த விதிமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து வகையான மருந்துகளையும் துபாய் செல்லும் விமான பயணிகள் எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட சில மருந்துகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். இந்த விதிமுறைகளை மீறுவோர் கடுமையான அபராதங்களை செலுத்த வேண்டியிருக்கும். துபாய் விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம் துபாய் உள்ளிட்ட எந்த வெளிநாடுகளுக்கு சென்றாலும் விமான பயணிகள் கட்டாயம் தங்களுடன் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வளவு நாட்கள் துபாய் சென்ற விமான பயணிகள் மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இனி எல்லா மருந்து பொருட்களையும் எடுத்துச் செல்லமுடியாது. குறிப்பிட்ட சில மருந்து பொருட்களை எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றமாகும். நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அதாவது துபாய் செல்ல திட்டமிட்டிருந்தால் புதிய விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். மேலும் படிக்க | Aadhaar Card Update: ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற வேண்டுமா... எளிய வழிமுறை இதோ விமானத்தில் எந்த பொருட்களை எல்லாம் எடுத்து செல்ல முடியாது? தலைச்சுற்றலை ஏற்படுத்தும் கோகோயின், ஹெராயின், பாப்பி விதைகள் மற்றும் போதை மருந்துகள், வெற்றிலை மற்றும் சில மூலிகைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது. யானைத் தந்தம் மற்றும் காண்டாமிருகக் கொம்பு, சூதாட்டக் கருவிகள், மூன்று அடுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் அரபு அமீரகம் தடை விதித்துள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எடுத்துச் செல்வதும் குற்றமாகக் கருதப்படும். எண்ணெய் ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் கல் சிலைகளை எடுத்துச் செல்ல முடியாது. போலி நாணயம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட அசைவம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியாது. இதனையும் மீறி ஒரு பயணி தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சில பொருட்களுக்கு விதிவிலக்கு துபாய்க்கு பயணம் செய்யும்போது கூடவே எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் சிலவற்றுக்கு நீங்கள் முதலில் பணம் செலுத்த வேண்டும். இந்த பட்டியலில் செடிகள், உரங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், புத்தகங்கள், அழகுசாதனப் பொருட்கள், வயர்லெஸ் சாதனங்கள், மதுபானங்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், இ-சிகரெட்டுகள் மற்றும் மின்னணு ஹூக்காக்கள் ஆகியவைக்கு முன்கூட்டியே பணம் செலுத்தினால் உங்களுடன் எடுத்துச் செல்லலாம். கட்டாயம் எடுத்துச் செல்லவே முடியாத மருந்து பொருட்கள் : பீட்டாமெத்தோல், ஆல்பா-மெத்தில்பெனிடைல், கஞ்சா, கோடாக்சைம்,ஃபெண்டானில், மெத்தடோன், அபின், ஆக்ஸிகோடோன், டிரிமெபெரிடின், ஃபெனோபெரிடின், கேத்தனோன், கோடீன், ஆம்பெடமைன் உள்ளிட்ட சில பொருட்கள். மேலும் படிக்க | IRCTC Super App: டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் வரை... All-in-One செயலி சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.