TAMIL

டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?

Dinga Dinga Virus Viral Video : கொரோனா காலத்திற்கு பிறகு எந்த இடத்தில் “வைரஸ் பரவுகிறது” என்ற செய்தியை கேட்டாலும் பயம் தொர்றிக்கொள்கிறது. கொரோனா அளவிற்கு இல்லை என்றாலும், ஒரு தற்போது பரவி வரும் ஒரு வைரஸ், பலரை பயமுறுத்தி வருகிறது. டிங்கா டிங்கா வைரஸ்: உகாண்டா நாட்டில்தான் இந்த வைரஸ் பரவி வருகிறது இந்த வைரஸால் இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். இது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளைத்தான் அதிகமாக பரவி வருகிறதாம். உகாண்டாவின் Bundibugyo என்ற மாவட்டத்தில்தான் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறதாம். பரவுவதற்கான காரணம்: சில தகவல்களின் படி, இந்த நோய் பரவுவதற்கான காரணம் குறித்து இன்னும் எதுவும் தெரியவில்லையாம். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களும் சிறுமிகளும் கையில் நிற்காமல் நடுங்கிக்கொண்டே இருப்பார்களாம். இந்த நடுக்கம் பார்ப்பதற்கு நடனமாடுவது போல இருக்குமாம். இந்த வைரஸ் வந்துவிட்டால் அதன் ஆரம்ப அறிகுறி அதிகமாக காய்ச்சல் அடிப்பதுதான். அதன் பிறகு உடல் நடுங்க ஆரமிக்குமாம். இதற்கு என்ன திர்வு, இதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதற்கான வழியும் யாருக்கும் தெரியவில்லை. યુગાન્ડામાં ફેલાયો 'ડિંગા ડિંગા' વાયરસ ચેપ લગતા જ તાવની સાથે વ્યક્તિ નાચવા માંડે 300થી વધુ કેસ . . VC : @thetatvaindia #NEWS #Uganda #virus #dingadinga pic.twitter.com/uaklVw48OQ — Dhruv Sanchaniya (@DhruvSanchania) December 19, 2024 டிங்கா டிங்கா வைரஸ் முற்றிப்போனால், கை-கால்கள் முடங்கி போவது, உடல் செயலிழந்து போவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படுமாம். இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அந்த மாவட்ட நிர்வாகம் இது முதலில் 2023ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. அதிலிருந்து அந்நாட்டின் அரசாங்கம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறதாம். இது எங்கிருந்து பரவ ஆரம்பித்தது என்பது குறித்தும் இன்னும் மர்மமாக உள்ளது. வைரல் வீடியோ: டிங்கா டிங்கா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிலர், உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நோய் தாக்குபவர்களின் உடல் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்காது. இது, வெளியில் இருந்து பார்ப்பதற்கு அவர்கள் நடனம் ஆடுவது போல இருக்கும். இதனால் பலரால் நடக்க கூட முடியாதாம். மேலும் படிக்க | கைது செய்ய வந்த இடத்தில் கைத்தட்டி நடனமாடிய காவலர்கள்! வைரல் வீடியோ.. மேலும் படிக்க | “தம்பி ஓரம் போப்பா..” வழியில் நின்ற நபரை தாேளில் தட்டிய யானை! வைரல் வீடியோ.. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.