Year Ender 2024, Top 5 High End Smartphones: முன்பெல்லாம் தொழில்நுட்பம் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் பெரிய பாய்ச்சலை அடையும். ஆனால் இப்போதெல்லாம் மூன்று மாதங்கள், ஆறு மாதங்களில் எல்லாம் பெரிய பெரிய மாறுதல்களை தொழில்நுட்ப உலகம் சந்தித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு உள்பட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மக்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்துவிட்ட நிலையில் தொடர்ந்து இதன் அப்டேட் வந்துகொண்டே தான் இருக்கும். அப்படியிருக்க இந்த 2024ஆம் ஆண்டு தொழில்நுட்ப துறைக்கு மிகவும் சிறப்பான ஆண்டு எனலாம். புது புது ஸ்மார்ட்போன் மாடல்கள் முதல் தகவல் தொடர்புதுறை வரை பல்வேறு புதிய விஷயங்களை நீங்கள் இந்தாண்டு கடந்துவந்துருப்பீர்கள். அந்த வகையில், இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களை மெய்மறக்கச் செய்த டாப் மாடல்கள் பல உள்ளன. குறிப்பாக, பட்ஜெட் விலையில், பட்ஜெட்டை விட சற்று அதிகமாக, பட்ஜெட்டை விட சற்று குறைவாக, உயர் ரகத்திற்கு்ம சற்று குறைவாக, உயர் ரக ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் இந்த 2024ஆம் ஆண்டில் அடுத்தடுத்து காலடி எடுத்து வைத்தன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்த உயர் ரக ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம். Google Pixel 9 Pro XL இந்த மாடல் சமீபத்தில் வெளியான கூகுள் பிக்சல் 9 சீரிஸில் இடம்பெற்றிருந்தது. இதன் டிஸ்பிளே 6.80 இன்ச் ஆகும். அதிவேக செயல்திறன் கொண்ட இந்த மொபைல் கூகுள் டென்சார் G4 சிப் கொண்டுள்ளது. இதன் பின்பக்கத்தில் 3 கேமராக்களை கொண்ட அமைப்பு உள்ளது. மேலும், இதில் செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக முன்பக்க கேமராவில் 42 மெகா பிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்விலை ரூ.1,24,999 ஆகும். மேலும் படிக்க | ராக்கெட் வேக இணையத்தை கொடுக்கும் 6GHz அலைவரிசைக்கு... மத்திய அரசு விரைவில் ஒப்புதல்? iQOO 13 5G இந்த ஸ்மார்ட்போனும் இந்தியாவுக்கு இப்போதுதான் அறிமுகமானது. இதில் IP69 ரேட்டிங் இருப்பதால், வாட்டர் ப்ரூஃப் கொண்டது.மேலும், 6.82 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இதில் Snapdragon 8 Elite Processor with 3nm தொழில்நுட்பத்தில் வந்துள்ளது. இதில் 1TB ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி RAM இடம்பெற்றுள்ளது. 50+50+50 MP என பின்புறம் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கம் கேமராவில் 32MP பிக்சல் கொடுக்கப்பட்டது. இதன் விலை ரூ.54,999 ஆகும். Vivo X200 Pro இது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகமானது. இதிலும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6.78 இன்ச் LTPO Amoled திரையும் உள்ளது. மேலும், இந்த மொபைலில் MediaTek's Dimensity 9400 சிப்செட் உடன் வருகிறது. இதில் 200MP + 50MP + 50MP சென்சாருடன் வருகிறது. முன்பக்க கேமராவிலும் 32MP உள்ளது. இதன் பேட்டரியும் 6000mAh ஆகும். இதன் விலை ரூ.94,999 ஆகும். Samsung Galaxy S24 Ultra இதுவும் கேமராவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு சந்தைக்கு வந்த ஸ்மார்ட்போன்தான். பெரிய அளவிலான இந்த ஸ்மார்ட்போனில் 6.80 இன்ச் டிப்ஸிளே உள்ளது. 200MP + 12MP + 50MP + 10MP கேமரா கொண்டு இதன் முன்பக்க கேமரா 12 MP அக உள்ளது. இதில் 5000mAh பேட்டரியும் உள்ளன. இந்த மொபைலின் விலை ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ஆகும். Apple iPhone 16 Pro Max ஐபோன் 16 சீரிஸில் இதுவும் கடந்த செப்டம்பரில் வெளியானது. A18 Pro சிப்செட் இதில் உள்ளது. 6.90 இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது. 256ஜிபி ஸ்டோரேஜை வேண்டினால் இதற்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். மேலும் படிக்க | ஒன்பிளஸ் நார்ட் CE4 Lite 5G... நல்ல தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் Z2 இலவசம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
உடல்நல பிரச்சனைகளை சொல்லி அடிக்கும் கில்லி இந்த நெல்லி: தினமும் சாப்பிடுங்க
- by Sarkai Info
- December 24, 2024
பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும்... மீண்டும் மீண்டும் துரை வைகோ சொல்வது என்ன?
December 24, 2024What’s New
Spotlight
டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?
- by Sarkai Info
- December 20, 2024
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- By Sarkai Info
- December 20, 2024
விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..
- By Sarkai Info
- December 20, 2024
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்
- By Sarkai Info
- December 20, 2024
ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!
- By Sarkai Info
- December 20, 2024
Featured News
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!
- By Sarkai Info
- December 20, 2024
Latest From This Week
Flipkart Big Saving Days Sale: ரூ.6,000 -க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
நெல்லையில் சாதி வன்ம படுகொலை? நீதிமன்ற வாசலில் துடிதுடித்து இறந்த இளைஞர் - பரபரப்பு பின்னணி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.