TAMIL

ஆண்களை அச்சுறுத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்த அறிகுறிகள் அலர்ட் ஆகிடுங்க!!

Symptoms of Cancer: உலகம் முழுதும் பலர் புற்றுநோயின் பிடியில் சிக்கியுள்ளனர். அதுவும் சமீபத்திய காலத்தில் பலர் இந்த நோய்க்கு அதிகமாக ஆளாவதை நாம் காண்கிறோம். இதிலிருந்து விடுபடுவது மிக கடினம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதன் மூலம் அதன் ஆபத்தை குறைக்கலாம். ஆனால் அதைத் தடுப்பது எளிதானது அல்ல. சமீப காலமாக இளைஞர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இது ஒரு அமைதியான புற்றுநோயாக கருதப்படுகின்றது. அதாவது இது உடலில் சுவடே இல்லாமல் அமைதியாக வளரும். இதன் காரணமாக இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்வது கடினம். இது படிப்படியாக மற்ற உறுப்புகளுக்கும் பரவுகிறது. 2 ஆண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் இந்த புற்றுநோய் வருவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல், மூன்றில் ஒரு பெண்ணுக்கு புற்றுநோய் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான சில முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். ஆண்களுக்கு ஏற்படும் ஐந்து பொதுவான புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், மெலனோமா தோல் புற்றுநோய் மற்றும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஆகியவை அடங்கும். 2022 ஆம் ஆண்டிலிருந்து புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைப் புரிந்து கொள்வது மிக அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றங்கள்: - சிறுநீர் கழிப்பதில் சிரமம் - சிறுநீரின் ஓட்டம் குறைதல் - அவ்வப்போது சிறுநீர் கழித்தல் - சிறுநீர் கழிக்கும் போய்து இரத்தம் வருதல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். மேலும் படிக்க | பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்! இரவில் சிறுநீர் கழித்தல்: இரவில் அவ்வப்போது சிறுநீர் கழிப்பது நாக்டூரியா எனப்படும். புரோஸ்டேட் புற்றுநோய்க்கு இது ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. வலி மற்றும் எரிச்சல்: ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சலை உணர்ந்தால், அது ப்ரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த ஆறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசிப்பது நல்லது. பலவீனம் அல்லது சோர்வு: போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு இருந்த பிறகும், ஒருவர் தொடர்ந்து சோர்வாகவோ, பலவீனமாகவோ இருந்தாலோ, அல்லது பசி இல்லாமல் இர்ந்தாலோ, அது புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். முதுகுவலி: முதுகில் வழக்கத்திற்கு மாறான வலி இருந்தால், இந்த வலி எந்த காரணமும் இல்லாமல் ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வலி புற்றுநோய் எலும்புகளுக்கு பரவத் தொடங்கியிருப்பதைக் குறிக்கின்றது. கட்டிகள்: உடலில் எந்த இடத்திலாவது காரணமே இல்லாமல் கட்டிகள் தோன்றுவது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் இது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். வயிற்றுவலி மற்றும் அஜீரணம்: பொரித்த உணவுகளை சாப்பிட்டவுடன் வயிற்றுவலி வருவது சகஜம். ஆனால் மேல் வயிற்றில் எப்பொழுதும் வலி இருப்பது சாதாரண விஷயமல்ல. இதனுடன் அதிக உணவை உட்கொள்வதும் வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, அடிக்கடி எடை குறைதல் மற்றும் காரணம் இல்லாத இருமல் ஆகியவையும் ஆண்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகளாக கருதப்படுகின்றது. (பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) மேலும் படிக்க | பூசணி விதை (ம) சூரியகாந்தி விதையில் கொட்டிகிடக்கும் அற்புத பலன்கள் !! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.