TAMIL

இந்த வைரல் வீடியோவை பார்த்தால்... இனி சோன் பப்டியை சாப்பிடவே யோசிப்பீங்க!

Food Viral Video: தீபாவளி என்றாலே வீட்டில் இனிப்பும், பலகாரமும் நிறைந்திருக்கும். வடை, அதிரசம், முறுக்கு போன்றவை தீபாவளிக்கு நம்மூர்களில் அதிகம் உண்ணப்படும் பலகாரங்கள் ஆகும். அதேபோல், குலாப் ஜாமுன், சோன் பப்டி போன்றவையும் தற்போதைய காலகட்டத்தில் பலராலும் உண்ணப்படுகிறது. பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு சோன் பப்டியை இனிப்பாக வழங்கும் வழக்கமும் உள்ளது. அந்த வகையில், சோன் பப்டி விரும்பி உண்ணும் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு வீடியோ இன்று தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சோன் பப்டி மிகவும் சுகாதாரமற்ற வகையிலும், ஆட்சேபனைக்குரிய வகையிலும் தயாரிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. மேலும் இந்த சோன் பப்டி தயாரிப்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கமெண்ட் பிரிவில் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ வைரலாகி வரும் அந்த வீடியோவில், சோன் பப்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவை ஒரே பெரிய கரண்டியில் எடுத்து, பெரிய சட்டியில் போட்டு சூடு செய்கின்றனர். அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சட்டியில் சூடுசெய்கின்றனர். மற்றொருவர், கையில் மற்றொரு மாவை எடுத்துக்கொண்டு செங்கல் பூசப்படாமல் இருக்கும் சுவரில் இருக்கும் கம்பியில் அந்த மாவை வைத்து, நல்ல பதத்திற்கு வரும் வரை பிசைகிறார். அந்த பிசைந்த மாவை சட்டியில் உள்ள மாவோடு சேர்க்கின்றனர். மேலும் படிக்க | தூங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது ஏறிய பாம்பு! அதிர்ச்சியளிக்கும் வீடியோ! பின்னர் அதே சட்டியில் அந்த இரண்டு மாவையும் நான்கு பேர் சேர்ந்தே கைகளால் பிசைகின்றனர். அந்த மாவை சோன் பப்டியின் பதத்திற்கு நன்கு இழுத்து, இழுத்து பிசைகின்றனர். அவர்களின் கைகளில் குச்சி போன்ற ஒன்றும் மாவு பிசைவதற்காக பயன்படுத்தப்படுகிறது. நூல் நூலாக அந்த மாவு வந்த உடன், அதனை ஒரு அச்சு பாத்திரத்தில் மாற்றி ஒரு மூடியை போட்டு மூடிகின்றனர். மேலும் அந்த மாவு அந்த அச்சில் பதியவும், சமநிலைக்கு வரவும் அந்த மூடப்பட்ட பாத்திரத்தின் மீது இரண்டு பேர் செருப்பு கால்களோடு ஏறி நிற்கின்றனர். நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அதையே தலைகீழாக திருப்பிப் போட்டு மீண்டும் அந்த இருவர் செருப்பு கால்களோடு ஏறி நின்று மாவு இருக்கும் அனைத்து பகுதிகளும் நன்கு சமநிலை ஆகும்படி மிதிகின்றனர். அதன் பின் தேவைப்பட்ட அச்சுக்கு அந்த சோன் பப்டியை வெட்டி எடுக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பார்க்கும் பல பேரும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒருவர்,"இன்றுதான் நான் ஒரு பாக்ஸ் சோன் பப்டியை சாப்பிட்டேன்... எப்படி வாந்தி எடுப்பது?" என கமெண்ட் செய்துள்ளார். "சுத்தம் சுகாதாரம் இந்த நாட்டில் சட்டவிரோதம் ஆகும்" என மற்றொரு பதிவர் கமெண்ட் செய்துள்ளார். மேலும் மற்றொருவர்,"தெரு உணவுகளை இந்தியா தடை செய்ய வேண்டும். ஆம், மக்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும், ஆனால் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியமாக இருக்க வேண்டும்" என்றார். ஓரிருவர் செய்யும் இதுபோன்ற தவறுகளுக்காக ஒட்டுமொத்த தெருவோர உணவு விற்பனையாளர்களையும் சந்தேகப்படுவது அவசியமற்றது. ஆனால், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக இவற்றை கவனிக்க வேண்டும் என்பதும் முக்கியம். மேலும் படிக்க | மணமகன் கொடுத்த 'ஸ்வீட் சர்ப்ரைஸ்'... அதற்கு மணமகள் கொடுத்த 'கியூட் ரியாக்சன்' - வைரல் வீடியோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.