TAMIL

EPS Higher Pension: 97,000 பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி.... விரைவில் அதிக ஓய்வூதியம்

EPFO Higher Pension: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995ன் (Employees Pension Scheme, 1995) கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் 97,640 இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிக ஊதியத்தில் (PoWH) ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளதாக பல ஊடக அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன. இது இபிஎஸ் உறுப்பினர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. இதை பற்றி முழுமையாக இந்த பதிவில் காணலாம். ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் (PPO) வழங்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை (8,401) கோரிக்கை அறிவிப்புகளைப் பெற்ற நபர்களின் எண்ணிக்கையுடன் (89,235) சேர்த்து மொத்தத் தொகை கணக்கிடப்பட்டதாக கூறப்படுகின்றது. நவம்பர் 2022 இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, அதிக சம்பளத்தில் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தனிநபர்கள் மட்டுமே டிமாண்ட் நோட்டீஸ்களை பெறுகிறார்கள். Higher EPS Pension: உயர் இபிஎஸ் ஓய்வூதியம் என்றால் என்ன? ஒரு ஊழியர் அதிக ஓய்வூதிய விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, ​​அவர் ஓய்வூதிய திட்டத்திற்கு முதலாளி / நிறுவனம் சார்பில் அதிக பங்களிப்பை தேர்வு செய்கிறார். சம்பள அதிகரிப்பின் அடிப்படையில் ஓய்வூதியத் திட்டத்திற்கு முதலாளியின் பங்களிப்புகள் விநியோகிக்கப்படும் அளவிற்கு வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கார்பஸ் குறைகிறது. செப்டம்பர் 1, 2014 இல் இபிஎஃப் சந்தாதாரர்களாக (EPF Subscribers) இருந்த ஊழியர்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். கூடுதல் தொகை வேறுபட்ட ஓய்வூதிய நிதியில் வைக்கப்படுகிறது. இது படிப்படியாக வட்டியை பெறுகிறது. இதன் மூலம் மொத்த ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படுகிறது. Member Sewa portal: உறுப்பினர் சேவா போர்ட்டலில் உயர் இபிஎஸ் ஓய்வூதிய விண்ணப்ப நிலையை எவ்வாறு கண்காணிப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம் EPS Higher Pension: இபிஎஸ் உயர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை எவ்வாறு டிராக் செய்வது? EPFO போர்ட்டலில் அதிக இபிஎஸ் ஓய்வூதிய விண்ணப்ப செயல்முறையை முடித்ததும், உங்களுக்கு ஒப்புகை ரசீது அனுப்பப்படும். நீங்கள் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தை டிராக் செய்ய, EPFO ​​ஒரு URL ஐ உங்களுக்கு வழங்குகிறது. அதிக வருமானத்திற்கான ஓய்வூதிய கோரிக்கைகளின் நிலையை இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம். ஸ்டெப் 1: என்ற இணையதளத்திற்கு செல்லவும். ஸ்டெப் 2: ‘இபிஎஸ் உயர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையைக் கண்காணிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும் ஸ்டெப் 3: அடுத்த பக்கத்தில், பின்வரும் விவரங்களை உள்ளிடவும் - ஒப்புகை எண் - UAN - PPO எண் - கேப்ட்சா குறியீடு ஸ்டெப் 4: எனது அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்திற்கான எனது ஆதார் எண், பயோமெட்ரிக் மற்றும்/அல்லது ஒரு முறை பின் (OTP) தரவை வழங்க ஒப்புதல் அளிக்க தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும். ஸ்டெப் 5: அதன் பின்னர் ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ் உறுப்பினர் ஓய்வூதியக் கணக்கீட்டிற்கான சூத்திரம் என்ன? ஓய்வூதியக் கணக்கீடு EPS 95 -இன் 12வது பாராவின்படி செய்யப்படும். ஓய்வூதியம் தொடங்கும் தேதி, ஓய்வூதியம் பெறும் சேவை காலம், ஓய்வூதியம் பெறத்தக்க சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான பொருந்தக்கூடிய சூத்திரத்தை நிர்ணயிக்கும். அதிக இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான கால்குலேட்டர் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) ஒருவரின் இபிஎஃ இருப்பு (EPF balance) அல்லது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மதிப்பிடுவதற்கு Excel பயன்பாட்டு அடிப்படையிலான கால்குலேட்டரை உருவாக்கியுள்ளது. Higher Pension Calculator: அதிக ஓய்வூதியத்தை கணக்கிட EPFO ​​இன் எக்செல் கால்குலேட்டரை எவ்வாறு பதிவிறக்குவது - ஓய்வூதிய விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்து, ஊழியர்கள் இந்த கால்குலேட்டரை EPFO ​​இன் உறுப்பினர் சேவா போர்ட்டலில் இருந்து பெறலாம். - கால்குலேட்டர் ‘Important links’ என்ற தலைப்பின் கீழ் கிடைக்கும். - இந்தக் கால்குலேட்டரைப் பயன்படுத்த, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் சேர்ந்த தேதி குறித்து ஊழியர் அறிந்திருக்க வேண்டும். - ஊழியர் EPF திட்டத்தில் பதிவு செய்த தேதி அல்லது நவம்பர் 1995 இல் இருந்து ஊதியத் தொகை, எது பிந்தையதோ அதை உள்ளிட வேண்டும். மேலும் படிக்க | PPF vs செல்வமகள் சேமிப்பு திட்டம்... இரண்டில் எதில் அதிக வருவாய் வரும் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.