TAMIL

ஆப்பிள் ஐபோன் முதல் சாம்சங் வரை... அமேசானின் நீடிக்கும் சலுகை விற்பனை...

இ-காமர்ஸ் தளமான அமேசானில், அமேசான் கிரேட் பெஸ்டிவ் சேல் (Amazon Great Festive Sale) நிறைவடைந்தது. ஆனால் பண்டிகை கால விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் சில பொருட்களுக்கு இன்னும் கிடைக்கின்றன. நீங்கள் இன்னும் குறைந்த விலையில் iPhone-Samsung ஃபோன்களை வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், இ-காமர்ஸ் இணையதளம் பண்டிகைக் கால சலுகைகளை சில பொருட்களுக்கு நீட்டித்துள்ளது. அமேசான் பண்டிகை விற்பனையின் ( Amazon Festrive Sale ) கீழ் கிடைக்கும் சலுகைகளை நீங்கள் இன்னும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன் பொருள். உங்களுக்காக ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்து வாய்ப்பை தவற விட்டிருந்தால் கவலைப்பட வேண்டாம் அமேசானில் பண்டிகை விற்பனை சலுகைகள் இன்னும் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன் விற்பனையில் கிடைக்கும் சில சிறந்த சலுகைகளை அறிந்து கொள்ளலாம் ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13) அமேசான் விற்பனையின் போது ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் 128ஜிபி சேமிப்பகம் கொண்ட மாடலை நீங்கள் 28 சதவீத தள்ளுபடியுடன் ரூ.43,999க்கு வாங்கலாம். இருப்பினும், அதன் பட்டியல் விலை ரூ.59,900. தற்போது, ​​குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. இதில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஐபோன் 13 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இந்த போனில் A15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 12எம்பி கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 12எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | 91 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? ஜியோ ரிலையன்ஸ் வழங்கும் சூப்பர் திட்டம்! சாம்சங் கேலக்ஸி S23 Ultra 5G சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5G (Samsung Galaxy S23 Ultra 5G) ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகம் கொண்ட மாடலை அமேசானிலிருந்து ரூ.74,999க்கு வாங்கலாம். இதற்கு 1000 ரூபாய் தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1250 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த போன் 6.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. இது தவிர Qualcomm Snapdragon 8 Gen 2 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் புகைப்படம் எடுப்பதற்காக 200எம்பி கேமரா உள்ளது. போனின் பேட்டரி 5000mAh ஆகும். iQOO Z9s 5G iQOO Z9s 5G ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகம் கொண்ட அமேசானிலிருந்து ரூ.21,998க்கு வாங்கலாம். குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு 2000 ரூபாய் தள்ளுபடி சலுகை கிடைக்கும். இந்த ஃபோனில் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, இந்த போனில் MediaTek Dimensity 7300 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் புகைப்படம் எடுப்பதற்காக 50எம்பி கேமரா உள்ளது. மேலும் படிக்க | ஆனந்த் அம்பானியின் தலைதீபாவளி கொண்டாட்டம்! ரூ 699 போன், 123 ரூபாய்க்கு ரீசார்ஜ் கொடுக்கும் ஜியோ! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.