TAMIL

பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?

Bigg Boss 8 Tamil Norms To Actor Vijay Sethupathi : தமிழில் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி போர் அடிக்காமல் செல்லவும், அதிக ரசிகர்கள் பார்ப்பதற்கு காரணமாகவும் இருந்தவர் இவர். இந்த சீசனில் இருந்து தான் விலகுவதாக கமல் அறிவித்த பின், விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை எடுத்து வாராவாரம் இவரது எபிசோடு முடிந்த பின் ஏதேனும் ஒரு புது பஞ்சாயத்து இழந்த வண்ணம் இருக்கிறது. பிக்பாஸ் 8: கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கியது. புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியை கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ரசிகர்களை ஏமாற்றாமல் தன்னிடம் இந்த பால்கள் அனைத்தையும் சிக்ஸர்களாக மாற்றி கவர்ந்தார் விஜய் சேதுபதி. இந்த 8வதுசீசன் பிக் பாஸில், இல்லத்திற்குள் நுழைந்த முக்கால்வாசி பெயர் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களாக இருந்தனர். இதனாலேயே பலருக்கு இந்த நிகழ்ச்சி பார்க்க ஆர்வம் இல்லாமல் போனது. அதேபோல நாட்கள் செல்ல செல்ல இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி குறைந்ததே அன்றி அதிகமாகவே இல்லை. விஜே விஷால், சுனிதா, அன்ஷிதா, ஆர் ஜே ஆனந்தி உள்ளிட்டோர் அவ்வப்போது மக்களை மகிழ்வித்தாலும் ஒரு சில பேர் இந்த நிகழ்ச்சியில் ஒரு ஆளாக மட்டுமே இருக்கின்றனர். இதனால் மக்களுக்கு இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மீது வைக்கப்பட்ட விமர்சனம்: தற்போது நான்கு வாரங்களைக் கடந்து பிக்பாஸ்8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வாராவாரம் விஜய் சேதுபதியின் எபிசோடு ஒளிபரப்பாகும் போது அவர் செய்யும் விஷயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதம் மாறி வருகிறது. பலர் இவரை கமல்ஹாசன் உடன் ஒப்பிட்டு பார்த்து அவரே சிறந்த தொகுப்பாளராக இருந்ததாக கூறி வருகின்றனர். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் விஜய் சேதுபதிக்கு புதிதாக ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க | விஜய் சேதுபதியின் அண்ணா-வா இது? அச்சு அசல் அதே முகம்! வைரல் போட்டோஸ்.. போடப்பட்ட கண்டிஷன். விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த போது அவருக்கு ஒரு கண்டிஷன் போடப்பட்டது. அது என்னவென்றால் விஜய் சேதுபதி வேறு எந்த படத்தின் ப்ரமோஷன் நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான் எனக்கு கூறப்படுகிறது. காரணம், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து விட்டதால் அவரை பின்தொடரும் மக்களின் கவனம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது இருக்கும் என்பதால் வேறு எந்த படத்தின் ப்ரமோஷனையும் தனது இணையதள பக்கத்தில் பகிரக் கூடாது என விதிமுறை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு சில நாட்களுக்குப் பிறகு அவர் பிற படங்களை பற்றி தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார். இப்போது, புதிதாக ஒரு விதிமுறை அவருக்கு போடப்பட்டிருக்கிறதாம். அவருக்கு வழங்கப்பட்ட அறிவுரை என்னவென்றால் பிக் பாஸ் குழு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே பேச வேண்டும் என்பது தான். ஆரம்பத்தில் தன் பாணியில் பேசியா அவர் பலரை வார்த்தைகளால் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வாரம் அவர் பிக் பாஸ் குழு கொடுத்த ஸ்கிரிப்டை பேசியதாகவும் அதனால்தான் அவர் வார்த்தைகளில் பலவித தடுமாற்றங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் படிக்க | ரூ.130 கோடி வாங்கிய கமல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.