TAMIL

வங்கதேசத்தில் தலைமைக்கு வரும் முகமது யூனஸ்... யார் இவர்? - உடனே மாற்றம் வருமா?

Muhammad Yunus Bio In Tamil: வங்கதேசத்தில் நிலவும் பதற்றம் மற்றும் உள்நாட்டு குழப்பங்கள் (Bangladesh Violence) அதன் உச்சத்தை எட்டிவிட்டன எனலாம். கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும், மொத்தம் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உயிரை காப்பாற்றிக்கொள்ளும் விதமாக பாதுகாப்பான இடம் நோக்கி நாட்டைவிட்டே வெளியேறியிருக்கிறார். வங்கதேசத்தன் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு கண்டனம் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் என்பது நாளடைவில் கலவரமாக உருவெடுத்து அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்னைகளுக்கு இடையே நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால ஆட்சி அமையும் என அந்நாட்டின் ராணுவ தளபதியும் பேசியிருந்தார். யார் இந்த முகமது யூனஸ்? இதிலும் ராணுவத்தின் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்த மாணவ அமைப்புகள், இடைக்கால அரசுக்கு தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ் பொறுப்பேற்க வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுத்தனர். வறுமை ஒழிப்பு நோக்கிய தொடர்ந்து செயலாற்றி வந்ததால், முகமது யூனஸ் கடந்த 2006ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தார். இவர் அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் பரீட்சயம் ஆகியிருந்தார், மேலும் அறிவார்ந்த சூழலிலும் நன்கு அறியப்பட்டவர் ஆவார். மேலும் படிக்க | பிரதமரின் உள்ளாடை கூட விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்... கொந்தளித்த நெட்டிசன்கள் வங்கதேசத்தில் அமைதியை திரும்ப வைப்பது என்பது முகமது யூனஸிற்கு பெரும் தலைவலியை தரலாம். ஏனென்றால் மாணவர்களுடன் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து மோதல் போக்கினை கடைபிடித்து வருகின்றனர், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் அனுபவம் இல்லாத யூனஸ் ஆடை ஏற்றுமதியின் மூலம் பல லட்சக்கணக்கான மக்களை வறுமையின் கோர பிடியில் இருந்து ஹசீனா தலைமையிலான அரசு மீட்டெடுத்தாலும், சமீப காலங்களில் வங்கதேசத்தின் பொருளாதாரம் என்பது ஒரு தேக்க நிலையை அடைந்திருக்கிறது எனலாம். எனவே தற்போது யூனஸ் தலைமை ஆலோசகராக இருப்பதால் நாட்டில் மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் இருக்கும் என கருதப்படுகிறது. 84 வயதான முகமது யூனுஸ், கிராமீன் வங்கியை நிறுவியவர். இதன்மூலம், இவர் சிறு, குறு தொழிலில் ஈடுபடும் ஏழை, எளிய மக்களுக்கு கடன்களை வழங்கி வந்தார். ஏழைகளுக்கும், பெரும்பாலும் பெண்களுக்கும் இவர் கடன் அளித்துள்ளார். பொதுநலனில் அக்கறையுடன் இருந்தாலும் இவர் அரசியலில் பெரும்பாலும் செயலாற்றியது இள்லை. குறிப்பாக, இதுவரையில் அவர் எவ்வித பதவியும் வகித்ததில்லை. 2007இல் வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி வந்தபோது முகமது யூனஸ் தனிக்கட்சியை உருவாக்க நினைத்தார், இருப்பினும் சில நாள்களிலேயே அந்த முடிவை கைவிட்டார் எனலாம். வங்கதேசத்தில் அடுத்தது என்ன? முகமது யூனஸ் எப்போதுமே தன்னை பற்றிய பேசமாட்டார் என்றும் அவரை சேவையாற்றும் மக்கள் குறித்து மட்டுமே பேசுவார் என்பதே அவர் குறித்து அவரின் நண்பர்கள் கூறும் ஒற்றை கருத்தாக இருக்கிறது. வங்கதேசத்தில் இந்த இடைக்கால அரசுக்கு பெரிதாக அதிகாரம் இருக்காது என்றாலும் அடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் வரை உள்நாட்டு அமைதியும், பொருளாதார வளர்ச்சியும் முகமது யூனிஸின்கீழ் பெரும் மாற்றத்தை சந்திக்கலாம் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் படிக்க | பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு... வங்கதேச போராட்டக்காரர்கள் ஆவேசம் - காரணம் என்ன? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.