TAMIL

வோடபோனின் ஓஹோ ஆஃபர்... 2GB தினசரி டேட்டா உடன் ... Disney + Hotstar இலவச சந்தா

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், வோடபோன் ஐடியா நிறுவனமும் டெலகாம் துறையில் கடும் போட்டியை அளிக்கிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) நிறுவனம், அவ்வப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு பல விதமான நன்மைகளை வழங்கும் பட்ஜெட் பிளான்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம், ஒரு வருட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றின் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவச அணுகலை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் , அதிக கட்டணத்தை கொண்டதாக இருந்தாலும், இதில் கிடைக்கும் நன்மைகளை வைத்து பார்க்கும் போது, சிறந்த பட்ஜெட் திட்டமாகவே தெரிகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் வோடபோன் ஐடியாவின் ( Vodafone Idea ) ஒரு வருட காலத்திற்கான ப்ரீபெய்ட் திட்டம் ரூ.3699 கட்டணத்தில் கிடைக்கும். இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி சேனலுக்கான இலவச மொபைல் சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேனலை ஆண்டு முழுவதும் இலவசமாக கண்டு மகிழலாம். ரூ.3699 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டம் Vi வழங்கும் ரூ.3699 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் Disney + Hotstar Mobile மற்றும் Vi Hero Unlimited என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | ஒன்பிளஸ் நார்ட் CE4 Lite 5G... நல்ல தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் Z2 இலவசம் Vi ரூ 3699 திட்டத்தின் கூடுதல் நன்மைகள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் தவிர வாடிக்கையாளர்களுக்கு வேறு விதமான மூன்று நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். முதலாவது வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், இதில் பயனர்கள் மீதமுள்ள டேட்டாவை வார நாட்களில் வார இறுதி நாட்களில் பயன்படுத்த முடியும். அடுத்ததாக டேட்டா டிலைட்ஸ் நன்மை. இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி அவசரத் தரவைப் பெறுகிறார்கள். இது தவிர, நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரை உண்மையிலேயே வரம்பற்ற டேட்டாவைப் பெறலாம். 2ஜிபி அவசரகாலத் தரவு வோடபோன் ஐடியாவின் ஒரு வருட காலத்திற்கான ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் 2ஜிபி அவசரகாலத் தரவை இரண்டு வெவ்வேறு நாட்களில் 1ஜிபி டேட்டாவாகப் பெறலாம். நீங்கள் பயன்படுத்தாத தரவு அனைத்தும் திட்டத்தின் கடைசி நாளில் காலாவதியாகிவிடும். FUP தரவு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆக குறையும். ஆனால் பயனர்கள் அதிவேக இணையத்தை தொடர்ந்து பயன்படுத்த டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். வோடபோன் ஐடியா 5ஜி சேவை வோடபோன் ஐடியா இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும், இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யவில்லை, தற்போது நாட்டில் உள்ள 17 தொலைத்தொடர்பு வட்டங்களில் மட்டுமே 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. Vi's 5G சேவை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஆகிய இரு வகை வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். மேலும் படிக்க | Flipkart Super Value Days Sale: வெகுவாக குறைந்த iPhone 15 விலை, மிஸ் பண்ணிடாதீங்க சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.