TAMIL

சனி பெயர்ச்சி, பிற கிரக மாற்றங்கள்: 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்

Lucky Zodiac Signs of New Year 2025: 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கு நாம் வந்துவிட்டோம். இது முடிந்து டிச்ம்பர் மாதமும் முடிந்தவுடன் புதிய ஆண்டு 2025 தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகின்றது. ஆண்டின் துவக்கத்திலேயே பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றவுள்ளன. புத்தாண்டு தொடங்கும் வேளையில், ஜனவரி மாதம் சில முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும். புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஜனவரியில் தங்கள் ராசியை மாற்றும். முதலாவதாக, ஜனவரி 4, 2025 அன்று, புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆவார். ஜனவரியில் சுக்கிரன் மீன ராசியில் பிரவேசிக்கிறார். மார்ச் மாதத்தில் சனியும் அதே ராசியில் பெயர்ச்சி ஆவார். ஜனவரியில் செவ்வாய் கடகத்தில் பெயர்ச்சி ஆவார். இந்த மாற்றங்களின் தாக்கம் பல ராசிகளில் காணப்படும். சனி பெயர்ச்சி 2025 பிப்ரவரி மாதம் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். எனினும், 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான பெயர்ச்சியாக பார்க்கப்படுவது மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி. மார்ச் 2025 இல் சனி தனது ராசியை மாற்றி மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும். வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி நீடிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். மேஷம் (Aries): மேஷ ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் முதல் 4 மாதங்கள் பல வித மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த மாற்றங்கள் நேர்மறையானவையாக இருக்கும். உங்கள் வாழ்வில் நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். பண வரவு அதிகமாகும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். மேலும் படிக்க | Venus Transit: தனுசு ராசியில் நுழையும் சுக்கிரன்! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பார்ட் தான்! ரிஷபம் (Taurus): ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டின் தொடக்கம் ஆக்கப்பூர்வமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புத்தாண்டு உங்களுக்கு பல விதமான மகிழ்ச்சியான நிகழ்வுகளை தரவுள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பணியில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, ஆண்டு முழுவதும் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை... கோடீஸ்வர யோகம் ஆரம்பம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.