TAMIL

தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?

Latest News Sathyaraj Refused To Act In Thalapathy 69 Movie : அரசியலில் விரைவில் களம் காண இருக்கும் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படம் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம். தளபதி 69: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய் , கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை தொடங்கிய போது தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கடைசியாக கமிட்டாகி இருக்கும் படத்தில் நடித்து முடித்தவுடன் முழு நேரமாக அரசியல் களம் காணுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது இந்த திடீர் அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் அரசியலுக்கு வந்ததற்கு வரவேற்பு தெரிவித்தனர். தளபதி 69 படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கவிருக்கும் பட நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படக்குழுவினர்.. தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. அதன்படி விஜயுடன் ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் ஜோடியாக சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே இதிலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது தமிழில் வில்லன் நடிகராக உருமாறி இருக்கும் பாபி டியோல் இதிலும் வில்லனாக வருகிறார். பிரேமலு படம் மூலம் பிரபலமான மலையாள நாயகி மமிதா பைஜூ, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு விஜயின் தங்கை ரோல் என கூறப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் சேர இருந்த நடிகர் ஒருவர் இப்போது நடிக்க வர மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. அழைத்த விஜய் வரமறுத்த சத்யராஜ்.. நடிகர் சத்யராஜை தளபதி 69 திரைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் சத்யராஜை தளபதி 69 படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் இருப்பினும் அவர் மசியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் படிக்க | தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா? காரணம் என்ன? விஜயுடன் முன்னர் சேர்ந்து நடித்திருந்த சத்யராஜ் இப்பொழுது நடிக்க மறுப்பதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. “முன்பு விஜய் நடிகராக மட்டும் இருந்தார். அதனால் அவர் படங்களில் நடித்தேன். இப்போது அரசியல்வாதியாகிவிட்டார். அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால் எவ்வளவு தொகை கொடுத்தாலும் விஜய் படத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு கிடையாது” என்று சத்யராஜ் கூறியுள்ளதாக பேசிக் கொள்கின்றனர். சத்யராஜ் -விஜயின் கூட்டணியில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. இரண்டுமே சூப்பர் ஹிட் ஆன படங்கள். 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு சைலன்சர் என்ற ஆசிரியராக நடித்திருப்பார் சத்யராஜ். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.