TAMIL

மாடல் அழகியை துண்டு துண்டாக வெட்டி... அதை மிக்ஸியில் போட்டு... கணவன் செய்த கொடூர கொலை!

World Bizarre Crime News: உலகின் மிக அமைதியான நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கொலை ஒன்று அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நாட்டில் பிரபலமாக திகழ்ந்த பெண்மணியை அவரின் கணவரே கொடூரமாக கொலை செய்திருந்த நிலையில், அவர் எப்படி கொலை செய்தார் என்பது குறித்து சுமார் தற்போது ஆறு மாதங்களுக்கு பிறகு விசாரணையின் மூலம் வெளிவந்துள்ளது. இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம். வாசகர்களுக்கான எச்சரிக்கை: 18 வயதுக்கு கீழானவர்கள், இதயம் பலவீனமாவர்கள் மேற்கொண்டு வரும் தகவல்களை தவிர்க்கவும். மனதை தொந்தரவு செய்யும் உள்ளடக்கம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் நடந்த கொடூர கொலை மிஸ் சுவிட்சர்லாந்து அழகிப் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்ற கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் என்பவரை அவரது கணவர் தாமஸ் துண்டு துண்டாக வெட்டி உடலை அடையாளம் தெரியாமால் உருகுலைத்ததாக சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி 38 வயதான கிறிஸ்டினா, பேஸ்ஸில் நகரில் இருந்து தென்மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள பின்னிங்கன் நகரில் உள்ள அவரது வீட்டின் சலவை அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் படிக்க | WWE பாடிஸ்டாவா இது... எப்படி இருந்த மனுசன்... இப்படி ஆனது ஏன்...? அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கிறிஸ்டினா கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 41 வயதான இவரின் கணவர் இந்த கொலைத் தொடர்பாக முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் பிணை கோரி அவர் தொடர்ந்திருந்த மனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. மிக்ஸியில் அரைத்த பயங்கரம்... விசாரணையில் மனைவி கிறிஸ்டினாவை கழுத்தை நெறித்து கொலை செய்ததை தாமஸ் உறுதிப்படுத்தினார். கிறிஸ்டினாவின் உடற்கூராய்விலும் அதுவே குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்டினா உடலை கத்தி, தோட்டத்திற்கு பயன்படும் கத்தரிகள் ஆகியவை கொண்டு வெட்டியதாகவும், சில பாகங்களை மிக்ஸியால் அரைத்து, இரசாயன கரைசலில் கரைத்ததாகவும் விசாரணையில் தாமஸ் கூறியுள்ளார். தற்காப்புக்காகவே தான் இந்த கொலையை செய்ததாக தாமஸ் கூறியுள்ளார். சலவை அறையில் கிறிஸ்டினா தன்னை கத்தியால் குத்த வந்ததாகவும், தற்காப்புக்கே பதிலுக்கு தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கிறிஸ்டினா உயிரிழந்த பின்னர் அச்சம் ஏற்பட்டதால் அவரது உடலை அடையாளம் தெரியாமல் அழிக்க அதனை துண்டு துண்டாக வெட்டியதாக தாமஸ் கூறியுள்ளார். தற்காப்புக்கு கொலையா? ஆனால், தற்காப்புக்காக கொலை செய்ததாக தாமஸ் கூறுவதை மருத்துவ தடயவியல் அறிக்கைகள் மறுக்கின்றன. மேலும், தாமஸ் மனநோய்க்கான அறிகுறிகளுடன் இருந்தார் என்பதையும் அதிகாரிகள் விசாரணையின் மூலம் கண்டறிந்தனர். இருப்பினும், மருத்துவ-தடயவியல் அறிக்கைகள் தாமஸின் தற்காப்பு கூற்றுக்கு முரணாக உள்ளன. விசாரணையில் தாமஸிடம் மனநோய்க்கான உறுதியான அறிகுறிகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர் கொடூரமான போக்குகள் கொண்டவர் என்றும் அதிகாரிகள் விவரித்துள்ளனர். மனைவியை கொலை செய்தபோதும், அவரது உடலை சிதைத்தபோதும் தாமஸ் பச்சாதாபம் ஏதுமின்றி இருந்திருக்கிறார் என அவர்கள் குறிப்பிட்டனர். இது முதல்முறையல்ல... தாமஸ் இதுபோல் கொடூரமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல என்பதையும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இதற்கு முன்னரே ஒருமுறை கிறிஸ்டினாவை கழுத்தை நெறித்த, அவரது தலை சுவரில் பலமாக தாக்கியுள்ளார் என தாமஸின் முன்னாள் பார்ட்னர் ஒருவர் தகவல் அளித்துள்ளார். முதலில், சலவை அறையில் மனைவி உயிரிழந்து கிடந்ததை கண்ட அச்சத்தில் அதை மறைக்க முயற்சித்ததாகவும், அதன்பின்னரே போலீசாருக்கு தகவல் அளித்ததாகவும் தாமஸ் கூறினார். கைதான பின்னர் நடத்திய விசாரணையில் தற்காப்புக்காக தானே கொலை செய்து, அச்சத்தில் அதனை மறைத்ததாகவும் கூறினார். இப்படி அவர் மாறி மாறி கூறி வரும் நிலையில் இவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | பூமிக்கு பேராபத்து... ஒரு கண்டமே காலியாக போகுது... திக் திக் பின்னணி சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.