TAMIL

மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு.. நீண்ட கால கோரிக்கை.. ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல செய்தி

Govt Pensioners Grievances Latest Update: அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல செய்தி வந்துள்ளது. 21 நாட்களுக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் ஏழு புதிய உத்தரவு சார்ந்து விவரங்களை பார்க்கலாம். ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் மிக அழுத்தமான சவால்களில் ஒன்று, அவர்களின் குறைகளை சரியான நேரத்தில் தீர்ப்பதில் இருக்கும் சிக்கல் தான். நீண்ட காலமாக, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளைத் தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து கவலைகளை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்குமாறு மத்திய அரசு அதன் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அளித்துள்ள உத்தரவு பாராட்டத்தக்க முயற்சியாகும். இதன்மூலம் ஓய்வுபெற்ற பணியாளர்கள் (Retired Personnel) எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது., இந்த நடவடிக்கையானது தேசத்திற்கு பல ஆண்டுகளாக சேவையாற்றியவர்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காட்டுகிறது. மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய குறைகள் நிவர்த்தி மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPENGRAMS) இணையதளத்தை, மத்திய அரசு சமீபத்தில் மறு ஆய்வு செய்தது. அதன் பின்பு ஓய்வூதியதாரர்களின் குறைகளை (Pensioners’ Grievances) விரைவாகவும், திறமையாகவும் தீர்ப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) குறைகளை 21 நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய அமைச்சகங்கள் முயற்சி செய்ய வேண்டும். குறைகளை தீர்க்க அதிக நேரம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இணையதளத்தில் இடைக்கால பதில் அளிக்க வேண்டும். முழு அரசு அணுகுமுறை என்பதன் கீழ் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இது இந்த அலுவலகத்துடன் தொடர்புடையது அல்ல எனக் கூறி குறைகளை சுருக்கமாக முடிக்க கூடாது. குறைதீர்க்கப்படும் நேரத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் நடவடிக்கை எடுக்கப்பட அறிக்கை இணைக்கப்பட வேண்டும். இணையதளத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான குறைகளை அமைச்சகங்கள் மாதம் தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். மேலும் குறைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரமான முறையில் தீர்வு காண்பதை அவை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர்களின் குறைகளின் போக்கை குறைதீர் அலுவலர் ஆய்வு செய்வார். குறைகள் தீர்க்கப்பட்ட 30 நாட்களுக்குள் அதனை எதிர்த்து மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேலும் தொடர்புடைய ஆவணங்கள் இருந்தால் இணைக்க வேண்டும். அமைச்சகத்தில் நேரடியாக வழங்கப்பட்ட குறைதீர்ப்பு விண்ணப்பங்களை CPENGRAMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்க்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது மேலும் படிக்க - ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்! இப்படி செய்தால் 8 சதவீதம் அதிக பென்சன் கிடைக்கும்! மேலும் படிக்க - EPS Higher Pension: 97,000 பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி.... விரைவில் அதிக ஓய்வூதியம் மேலும் படிக்க - EPF vs SIP vs PPF: அதிக ஓய்வூதிய நிதியை வழங்கும் திட்டம் எது? முழு கணக்கீடு இதோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.