TAMIL

செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்!

மேஷம் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் அஸ்வினி : புரிதல் உண்டாகும். பரணி : மேன்மை உண்டாகும். கிருத்திகை : ஆர்வம் ஏற்படும். மேலும் படிக்க | எமதர்மனிடம் கோரிக்கை வைக்க இதுவே சரியான நேரம்..! ஆயுள் நீட்டிக்கும் 10 ரூபாய் பரிகாரம் ரிஷபம் எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்மறை கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதளவில் சஞ்சலம் ஏற்படும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் கிருத்திகை : தாமதம் ஏற்படும். ரோகிணி : கவனம் வேண்டும். மிருகசீரிஷம் : சஞ்சலம் ஏற்படும். மிதுனம் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயமும், அறிமுகமும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும். திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும். புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும். கடகம் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். பயம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும். பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். ஆயில்யம் : முன்னேற்றமான நாள். சிம்மம் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : இழுபறிகள் விலகும். பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும். கன்னி வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாக அமையும். பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திரம் : சாதகமான நாள். அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும். சித்திரை : முயற்சிகள் கைகூடும். துலாம் புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். சோதனை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் சித்திரை : தடைகள் குறையும். சுவாதி : ஆதரவான நாள். விசாகம் : திருப்தியான நாள். விருச்சிகம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும், லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : சிந்தனைகள் மேம்படும். அனுஷம் : ஆதரவான நாள். கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும். தனுசு நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். அரசு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உணர்ச்சி விவேகம் இன்றி பொறுமையுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் மூலம் : சிந்தித்துச் செயல்படவும். பூராடம் : பொறுமையுடன் இருக்கவும். உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். மகரம் உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் பணி மாற்றம் நிமித்தமான சிந்தனைகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். சிரமம் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும். திருவோணம் : பயணங்கள் அதிகரிக்கும். அவிட்டம் : ஆர்வமின்மையான நாள். கும்பம் சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் அவிட்டம் : தீர்வுகள் கிடைக்கும். சதயம் : சிந்தனைகள் பிறக்கும். பூரட்டாதி : இழுபறிகள் மறையும். மீனம் உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆதரவு மேம்படும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயப் பணிகளில் சில நுட்பங்களை கற்பீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் பூரட்டாதி : ஆதரவுகள் மேம்படும். உத்திரட்டாதி : கவலைகள் மறையும். ரேவதி : ஆதாயம் உண்டாகும். மேலும் படிக்க | வார ராசிபலன்: இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கான பரிகாரங்களும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.