TAMIL

அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!

Heart Warming Viral Video : சமூக வலைத்தளங்கள் பல சமயங்களில் அவதூறு பரப்பினாலும், தேவையில்லாத விஷயங்களை நம் கண் முன் காட்டினாலும், சில சமயங்களில் நம் மனதை வருடும் வகையிலான வீடியோக்களை பார்ப்பதற்கான கருவியாக இருக்கிறது. இணையதளங்களின் பின்னுள்ள அற்புதமான மற்றும் பயமுறுத்தும் வகையிலான விஷயம் என்னவென்றால், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்தையோ அல்லது கெட்ட விஷயத்தை பல கோடி பேருக்கு தெரியப்படுத்தும் சக்தி அதற்கு உள்ளது. நன்மைகளும் நடைபெறுகின்றன, தீமைகளும் நடைபெறுகின்றன. இணையத்தை உபயோகிப்பவர்களை பல வகைகளில் பிரிக்கலாம். ஒரு தரப்பினர் வெட்டு குத்து கொலை போன்ற வன்முறை தூண்டும் விஷயங்களாக பார்த்து வந்தால், ஒரு சிலர் அவர்களின் மனதுக்கு நெருக்கமான மற்றும் பிறரின் மனதை சாய்ந்து படுத்தும் விஷயங்களை மட்டும் பார்ப்பார். அந்த வகையான ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ: बेटा हो तो ऐ बाइक का पेट्रोल खत्म हो गया है लेकिन बेटा फिर भी अपनी मां को बाइक पर बैठाकर उन्हें घर ले जा रहा हैI #ViralVideos #viralvideo #viral2024 #RajatDalal #ViratKohli #USElection2024 #AnushkaSharma #ThandelOnFeb7th #SagilityIPO #PuneChaDevaBhau pic.twitter.com/n2I911K7hK — (@mishra_aadhya90) November 5, 2024 தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவிடும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் பைக்கில் ஒரு பெண்ணை அமர வைத்தபடி அந்த பைக்கை தள்ளிக் கொண்டே போகிறார். பச்சை நிற சட்டை அணிந்திருக்கும் அவர் வியர்க்க விறுவிறுக்க, அந்த வண்டியை இழுத்து செல்கிறார். அவரது சட்டை முழுவதும் வியர்வையால் நனைந்து இருப்பது வீடியோவில் தெரிகிறது. மஞ்சள் நிற புடவை அணிந்திருக்கும் பெண், பைக்கில் அமர்ந்து கொண்டு பயணிக்கிறார். இதை சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ள பெட்டிசன்கள் எந்த பெண்ணும் இப்படி ஒரு மகனைத் தான் பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர். பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் தன் தாயை நடக்க வைக்க கூடாது என்று நினைத்த அந்த மகன், அவரை தன் வயிற்றில் அமர வைத்தபடி அதை தள்ளிச் சென்று கொண்டிருக்கிறார். இந்த வீடியோ பலரை நெகிழ வைத்துள்ளது. மேலும் படிக்க | தூங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது ஏறிய பாம்பு! அதிர்ச்சியளிக்கும் வீடியோ! மேலும் படிக்க | மணமகன் கொடுத்த 'ஸ்வீட் சர்ப்ரைஸ்'... அதற்கு மணமகள் கொடுத்த 'கியூட் ரியாக்சன்' - வைரல் வீடியோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.