TAMIL

6 நாள்கள் டிசம்பரில் ஜம்முனு டூர் போகலாம்... IRCTC-இன் அசத்தல் சுற்றுலா பிளான் - கம்மி கட்டணத்தில்!

IRCTC Tour Package In December January: 2024ஆம் ஆண்டு இன்னும் சில நாள்களில் நிறைவடைகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் நினைத்திருந்த பல விஷயங்கள் நடந்திருக்கும், பல விஷயங்கள் நடந்திருக்காது. இருப்பினும் அவை அடுத்தாண்டில் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் முனைப்பில் இருப்பதே சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த 2024ஆம் ஆண்டு இன்னும் நிறைவடையவில்லை என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நிறுவனங்கள் மாத இறுதியில் அதன் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை அளிக்கும். எனவே, அந்த விடுமுறை நாள்களில் 2024ஆம் ஆண்டுக்கு டாட்டா சொல்லும் வகையிலும், 2025ஆம் ஆண்டு வரவேற்கும் வகையிலும் பலரும் சுற்றுலாவுக்குச் சென்று தங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபவடுவார்கள் எனலாம். அதாவது வருடம் முழுவதும் அயராது உழைத்தவர்களுக்கு இந்த நாள்கள் நிச்சயம் ஒரு நிவாரணியாக இருக்கும். IRCTC அசாம், மேகாலயா சுற்றுலா திட்டம் அந்த வகையில், டிசம்பர் மாதம் நாடு முழுவதும் பனிக்காலம் என்பதால் குளிர் நிறைந்த பிரதேசங்களுக்கு இந்த காலகட்டத்தில் சுற்றுலா செல்லவே பலரும் திட்டமிடுவார்கள். அதுவும் வித்தியாசமான அனுபவம் தரும் சுற்றுலா தலங்களையே இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர். அப்படியிருக்க வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதும் சிறப்பான அனுபவத்தை தரும். அதிலும் அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றலாம்... தேதியையும் மாற்றலாம்... இதோ வழிமுறை தற்போது அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்ல இந்திய ரயில்வே துறையின் IRCTC தற்போது சிறப்பான சுற்றுலா திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் குறைந்த செலவில் இந்த மாநிலங்களின் சுற்றுலா தலங்களை கொண்டாடித் தீர்க்கலாம். IRCTC நிறுவனம் வழங்கும் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் உள்ளன, எந்தெந்த இடத்திற்கு செல்லலாம், எப்போது முதல் எப்போது வரை சுற்றுலா, ஒருவருக்கு எவ்வளவு கட்டணம் ஆகியவற்றை இங்கு காணலாம். அதற்கு முன் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் என்னென்ன சுற்றுலா தலங்கள் இருக்கின்றன என்பதையும் சுருக்கமாக இங்கு காணலாம். எங்கெல்லாம் போகலாம்? அசாமில் காசிரங்கா வனவிலங்கு சரணாலயம், காமாக்யா மாதா கோவில் போன்ற சிறந்த சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. குறிப்பாக, மேகாலயா மாநிலத்தின் அழகான நிலப்பரப்புகளையும், அங்கிருக்கும் ரம்மியமான நகரங்களையும் நீங்கள் காணலாம். இந்த IRCTC திட்டம் மூலம் நீங்கள் காசிரங்கா, ஷில்லாங், சிரப்புஞ்சி, கௌகாத்தி, மாவ்லின்னாங் உள்ளிட்ட அழகான நகரங்களுக்குச் செல்லலாம். IRCTC வழங்கும் இந்த அசாம் மற்றும் மேகாலயா சுற்றுலா திட்டம் மொத்தம் 5 இரவுகள் / 6 பகல்களை கொண்டது. இதில் நீங்கள் ரயிலில் மட்டுமின்றி நகரங்களுக்கு இடையே செல்ல குளிர்சாதன பேருந்து ஏற்பாடு செய்து தரப்படும். மேற்சொன்ன நகரங்களை நீங்கள் முழுவதுமாக சுற்றிப்பார்க்கலாம். உங்களுடன் ஒரு உள்ளூர் வழிகாட்டியும் இருப்பார். சுற்றுலாவுக்கான கட்டணம் எவ்வளவு? இந்த சுற்றுலா வரும் நாள்களில் இரண்டு முறை திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, வரும் டிசம்பர் 16ஆம் தேதி மற்றும் அடுத்தாண்டு ஜனவரி 29ஆம் தேதி என இரண்டு முறை அசாம் மற்றும் மேகாலயா சுற்றுலாவுக்கு IRCTC ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு முன்பதிவு செய்துகொண்டு நீங்கள் சுற்றுலாவுக்கு செல்லலாம். இந்த சுற்றுலா திட்டத்தில் தனியாக வருபவருக்கு 49,500 ரூபாயும், ஜோடி என்றால் நபருக்கு 42,500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் நீங்கள் 3 பேராக பயணம் செய்தால் 40,700 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. உங்களுடன் வரும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு, மெத்தையுடன் 35,990 ரூபாயும், மெத்தை வேண்டாம் என்றால் 32,990 ரூபாயும் கொடுக்க வேண்டும். 2 - 4 வயது வரையிலான குழந்தைக்கு நீங்கள் 26,500 ரூபாய் வரை கொடுக்க வேண்டும். மேற்கொண்ட தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். மேலும் படிக்க | Indian Railways: ரயில் தாமதமானால்... பயணிகளுக்கு கிடைக்கும் சில சலுகைகளும் வசதிகளும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.