Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார் எனவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் எனவும் அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கார் உஸ்-ஜமான் உறுதி செய்தார். மேலும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவோம் எனவும் அவர் பேசியுள்ளார். ஷேக் ஹசினா மற்றும் அவரது தங்கை ஷேக் ரிஹானா ஆகியோர் பிரதமர் இல்லத்தில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். ஷேக் ஹசினா வெளியேற்றத்திற்கு பின்னர் ராணுவ தளபதி ஆற்றிய உரையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் ராணுவ தளபதி உறுதியளித்தார். எனவே, போராட்டத்தை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் ராணுவ தளபதி கோரிக்கை வைத்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் எனவும் ராணுவ தளபதி பேசியிருக்கிறார். மேலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம் எனவும் தெரிவித்தார். Bangladesh Prime Minister Sheikh Hasina departed from Bangabhaban at around 2:30pm on Monday on a military helicopter, accompanied by her younger sister, Sheikh Rehana for a "safer place.": Bangladesh media reports pic.twitter.com/cAzcRgwvul — ANI (@ANI) August 5, 2024 இதன்மூலம், ஷேக் ஹசினா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன. இன்னும் சிலர் அகர்தலாவில் அவர் வந்திறங்கிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஒரு சில ஊடகங்களோ, ஷேக் ஹசினா ஃபின்லாந்து பறந்துவிட்டதாகவும் கூறுகின்றன. மேலும் படிக்க | இஸ்ரேல் vs லெபனான் உச்சகட்ட போர் பதற்றம்! காரணம் என்ன? என்ன பிரச்னை? 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போரின் தியாகிகள் மற்றும் அதற்காக போராடியவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஷேக் ஹசினா தலைமையிலான அரசு கடந்த 2018ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அப்போது எழுந்த மாணவர் போராட்டத்தால் இந்த சட்டம் முடக்கப்படுவதாக ஷேக் ஹசினா அறிவித்தார். தற்போது இந்த இட ஒதுக்கீட்டின் மீதான தடையை நீக்கி கடந்த மாதம் தாக்கா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் மாணவ அமைப்புகளும், இளைஞர்களும் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு எதிராக அரசின் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கி, போராட்டம் நடத்திய இளைஞர்கள் உடன் மோதலில் ஈடுபட்டனர். இவர்களை தடுக்க பாதுகாப்பு படையினரும் அதிரடியில் இறங்க, அங்கு நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடந்தேறியது. 300 பேருக்கு மேல் உயிரிழப்பு தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஷேக் ஹசீனாவின் சர்ச்சை பேச்சால் இந்த விவகாரம் இன்னும் உக்கரமானது. அவர் பேசிய அரசு சேனலின் அலுவலகம் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. கடந்த மாதத்தில் இருந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம், நேற்றில் இருந்து தீவிரமாகி உள்ள வன்முறையில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 ஆண்டுகளாக அவாமி லீக் கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினா இன்று அவரது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக வங்கதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பயன்படும் என்றும், இளைஞர்களுக்கு இதனால் அதிக வேலைவாய்ப்பின்மை ஏற்படும் என்பதால் பல பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எங்கு தஞ்சம் புகுந்துள்ளார்? விடுதலை போரின் தியாகிகள் மற்றும் அதற்காக போராடியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை வாங்காவிட்டால், ரஸாகர்ஸ் (Razakars) மக்களுக்கா இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என ஹசினா பேசியிருந்தார். இந்த பேச்சுதான் மாணவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ரஸாகர்ஸ் என்றால் வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் ஆதரவு மனநிலையில் இருந்தோர். எனவே, போராட்டக்காரர்களை ரஸாகர்ஸ் என்ற துரோகிகளுடன ஒப்பிடுவதா என இளைஞர்கள் கௌந்தளித்து அவரை பதவி விலக அழுத்தம் அளித்தனர். போராட்டம் வலுத்த காரணத்தாலும், ராணுவத்தின் அழுத்தத்தாலும் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு ஷேக் ஹசினா தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இந்தியாவின் திரிபுராவில், டெல்லியில் தஞ்சம் அடையாள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்து ஃபின்லாந்து அல்லது இங்கிலாந்துக்கு இந்தியாவில் இருந்து செல்லவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க | ஸ்டார் லைனர் கோளாறு சரி செய்யப்பட்டதா? நாசா வாய் திறக்காதது என்? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
உடல்நல பிரச்சனைகளை சொல்லி அடிக்கும் கில்லி இந்த நெல்லி: தினமும் சாப்பிடுங்க
- by Sarkai Info
- December 24, 2024
பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும்... மீண்டும் மீண்டும் துரை வைகோ சொல்வது என்ன?
December 24, 2024What’s New
Spotlight
டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?
- by Sarkai Info
- December 20, 2024
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- By Sarkai Info
- December 20, 2024
விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..
- By Sarkai Info
- December 20, 2024
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்
- By Sarkai Info
- December 20, 2024
ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!
- By Sarkai Info
- December 20, 2024
Featured News
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!
- By Sarkai Info
- December 20, 2024
Latest From This Week
Flipkart Big Saving Days Sale: ரூ.6,000 -க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
நெல்லையில் சாதி வன்ம படுகொலை? நீதிமன்ற வாசலில் துடிதுடித்து இறந்த இளைஞர் - பரபரப்பு பின்னணி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.