உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற தேவையான பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது வழியில் காணும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் இப்பொழுது கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ், பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே செயல்பட்டு வருகிறது. கூகுள் மேப்ஸ் (Google Maps) ஒரு வரைபடம் மட்டுமல்ல, பயணத்தின் போது பல தகவல்களை வழங்கும் மிகவும் பயனுள்ள செயலி. உங்கள் இருப்பிடத்தில் மட்டுமின்றி, புதிய நகரத்திற்கு சென்றாலும் உங்களுக்கு உதவக்கூடிய பல அம்சங்களை Google Maps கொண்டுள்ளது. கூகுள் மேப்ஸின் சில அம்சங்கள் உங்கள் வேலையை எளிதாக்கும். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். வழிகாட்டி (நேவிகேஷன்) வழிகாட்டி நேவிகேஷன் கூகுள் மேப்ஸின் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாகும். கூகுள் மேப்பில், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் விலாசத்தை குறிப்பிட்டால் போதும், இலக்கை அடைய நீங்கள் போக வேண்டிய தெளிவாக காட்டும். குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்வதற்கான எளிதான வழியை Google வரைபடம் உங்களுக்குச் சொல்லும். பொது போக்குவரத்து குறித்த தகவல் நீங்கள் பேருந்து, ரயில் அல்லது மெட்ரோவில் பயணிக்க விரும்பினால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பங்களையும் Google Maps காண்பிக்கும். போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல் கூகுள் மேப்ஸ் ட்ராஃபிக் அப்டேட்ஸ் தகவல்கள் மூலம் நீங்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம். போக்குவரத்து நெரிசல் எங்குள்ளது என்பது குறித்து முன்கூட்டியே தகவல்களை வழங்குவதால், அந்த வழிகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இது மிகவும் பயனுள்ள அம்சமாகும். போக்குவரத்து சோதனைகள் குறித்த தகவல்கள் கூகுள் மேப்ஸில் நீங்கள் செல்லும் வழியில், போக்குவரத்து துறை சோதனைகள் மேற்கொள்ளும் பகுதிகள் குறித்த தகவலையும் கொடுக்கும். இதனால், அபராதம் விதிக்கப்படும் அபாயம் அதிக உள்ள சாலைகளைத் தவிர்க்கலாம். அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம் வழியைக் கண்டறிந்த பிறகு, பாதை ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வழியைத் கஸ்டமைஸ் செய்வதன் மூலம் இதனை அறியலாம். வீதிக் காட்சி (Street View) வீதிக் காட்சி மூலம் நீங்கள் விரும்பிய பகுதியின் 360 டிகிரி காட்சியையும் பார்க்கலாம். அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இது உதவும். இதனுடன், 3டி மாடலையும் பார்க்க அனுமதிக்கும் புதிய அம்சம் இது. மேலும் படிக்க | ஆப்பிள் ஐபோன் முதல் சாம்சங் வரை... அமேசானின் நீடிக்கும் சலுகை விற்பனை... குறுகிய சாலைகள் குறித்த அலர்ட் செயற்கைக்கோள் படங்கள், ஸ்ட்ரீட் வியூ போன்ற அமசங்களை பயன்படுத்தி, சாலையின் அகலத்தை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் வாகனங்களுக்கு வழிகாட்டும் அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் செல்லும் வழியில் உள்ள குறுகலான சாலைகள் குறித்த எச்சரிக்கையை கூகுள் உடனே வழங்கும். இதனால் நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் வேறு வழியை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். வேக எச்சரிக்கை (Speed Alert) போக்குவர்த்து விதியில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட வேகமாக வாகனம் ஓட்டும்போது, கூகுள் மேப்ஸின் வேக எச்சரிக்கை அம்சம் உங்களை எச்சரிக்கும். இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய, Google Maps செயலியின் செட்டிங்ஸ் பிரிவுக்கு சென்று, வேக எச்சரிக்கையை ஆன் செய்யவும். ஆஃப்லைன் வரைபடங்கள் கூகுள் மேப்ஸை ஆஃப்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் தொலைபேசியில் இணைய இணைப்பு இல்லாதபோதும் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும் போது இந்த அம்சம் கை கொடுக்கும். Google வரைபடத்தில் அருகிலுள்ள உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பார்களையும் நீங்கள் காணலாம். மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் எப்போதும் ஹேங் ஆகாமல்... வேகமாக வேலை செய்ய... சில டிப்ஸ் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
உடல்நல பிரச்சனைகளை சொல்லி அடிக்கும் கில்லி இந்த நெல்லி: தினமும் சாப்பிடுங்க
- by Sarkai Info
- December 24, 2024
பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும்... மீண்டும் மீண்டும் துரை வைகோ சொல்வது என்ன?
December 24, 2024What’s New
Spotlight
டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?
- by Sarkai Info
- December 20, 2024
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- By Sarkai Info
- December 20, 2024
விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..
- By Sarkai Info
- December 20, 2024
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்
- By Sarkai Info
- December 20, 2024
ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!
- By Sarkai Info
- December 20, 2024
Featured News
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!
- By Sarkai Info
- December 20, 2024
Latest From This Week
Flipkart Big Saving Days Sale: ரூ.6,000 -க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
நெல்லையில் சாதி வன்ம படுகொலை? நீதிமன்ற வாசலில் துடிதுடித்து இறந்த இளைஞர் - பரபரப்பு பின்னணி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.