TAMIL

பிறப்புறுப்பை பதம்பார்த்த பாம்பு... கழிவறையில் திடீர் ஷாக் - கடைசியில் என்ன ஆச்சு?

Bizarre News In Tamil: பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்ற பழமொழியை பலர் சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். பாம்பை நீங்களே நேரடியாக பார்த்தாலும் உடனே பதற்றமாவீர்கள். அது விஷத்தன்மை உடையதா அல்லது விஷத்தன்னை இல்லாததா என்பது உறுதியாகவிட்டாலும் சரி பாம்பை கண்ட உடன் நிச்சயம் அச்ச உணர்வு மேலெழுந்துவிடும். தற்போதைய மழை காலத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூட பாம்புகள் வரும் தகவல்களையும், பாம்பு கடிப்பதால் பலர் உயிரிழக்கும் தகவல்களையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில் ஒருவருக்கு பாம்பால் அதுவும் மலை பாம்பால் ஏற்பட்ட பகீர் நிகழ்வு கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக வைத்துள்ளது. அந்த சம்பவம் குறித்து, அதில் பாதிக்கப்பட்டவர் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் இங்கு காணலாம். தாய்லாந்தில் பகீர் சம்பவம் தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தனத் தங்தேவனோன். இவர் தனக்கு நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தை புகைப்படங்கள், வீடியோக்கள் உடன் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட பின்னரே இது பொதுவெளிக்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த ஆக.20ஆம் தேதி அன்று நடந்ததாகவும் தனத் கூறியுள்ளார். மேலும் படிக்க | உக்ரைனுக்கு மோடி ரயிலில் செல்ல காரணம் என்ன? Rail Force One சிறப்பம்சங்கள் என்னென்ன? ஆக. 20ஆம் தேதி அன்று தனத் தனது வீட்டின் கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அவரது பிறப்புறப்பின் விதைப்பைகளில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய வடிவத்திலான கழிவறையில் அவர் அமர்ந்திருந்தபோது அவருக்கு இந்த திடீர் வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனத் அந்த பதிவில்,"ஏதோ ஒன்று என்னை கடிப்பது போல் இருந்தது. அது மிகவும் வலித்தது, உடனே கழிவறைக்குள் கையை விட்டு என்னவென்று பார்க்க நினைத்தேன். நான் பாம்பை பிடித்ததை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன்" என குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் பேஸ்புக் பதிவு கழிவறை முழுவதும் ரத்தம் அது 12 அடி மலைபாம்பு என்றும் அது தனது விதைப்பைகளை விடாமல் பற்றிக்கொண்டதாகவும், அதன் பிடியை தளர்த்தவே இல்லை எனவும் அவர் கூறினார். "நான் வேகமாக எழுந்து அதை பிடித்து இழுத்தேன். கடுமையாக வலித்தது. மிகவும் மோசமான வலி, மற்றும் கழிவறை எங்கும் ரத்தம் இருந்தது. கழிவறையில் ஒரு மலைப்பாம்பு இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என குறிப்பிட்டிருந்தார். அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கையில் அந்த பாம்பு அவரின் விரலையும் கடித்துவிட்டதாக அவர் கூறினார். உடனே அங்கிருந்த பாத்ரூம் பிரஷை வைத்து அந்த பாம்பின் தலையிலேயே அடித்ததை அடுத்து பிடியை தளர்த்தி உள்ளது. தனத்தின் தொடர் தாக்குதலை அடுத்து அந்த பாம்பு உயிரிழந்தது. கழிவறை முழுவதும் பாம்பின் ரத்தமாக இருந்துள்ளது. தனத் அண்டை வீட்டாரை தொடர்புகொண்டதை தொடர்ந்து அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். நல்வாய்ப்பாக தப்பித்த தனத் அதற்குள் தனத் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்த நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பாம்பை அங்கிருந்து அகற்றினர். ஊடம் ஒன்றில் பேசிய தனத்,"நல்ல வேளை அது வெறும் மலைப்பாம்பு. இதுவே நாகமாக இருந்திருந்தால் அது என்னை கொன்றிருக்கும்" என்றார். மலைப்பாம்பு விஷத்தன்மை உடையது இல்லை என்பதால், எவ்வித தையலும் இன்றி தனத் தப்பித்தார். வெறும் TT தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வீடு திரும்பியதாக தெரிவித்தார். மேலும் படிக்க | சுனிதா வில்லியம்ஸ் உயிருக்கு இப்படி ஒரு ஆபத்தா... ஆடிப்போன நாசா! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.