TAMIL

பிரதமரின் உள்ளாடை கூட விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்... கொந்தளித்த நெட்டிசன்கள்

Bangladesh Latest News Updates: வங்கதேசத்தில் கடந்த 15 ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நேற்று உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி வாக்கார் உஸ்-ஜாமன் நேற்று அறிவித்திருந்தார். மேலும் 20 ஆண்டுகள் வங்கதேசத்தை ஆண்ட ஷேக் ஹசீனா அவரது தங்கை ஷேக் ரிஹானா உடன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதையும், பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டதையும் ராணுவ தளபதி நேற்று உறுதிப்படுத்தினார். சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டு நாட்டில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்படும் என ராணு தளபதி உறுதிப்பட தெரிவித்தார். போராட்டக்காரர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்த அவர், மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார். பிரதமர் இல்லத்தில் போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவுக்கு நாட்டைவிட்டு வெளியேற 45 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஹசீனா அவசர அவசரமாக கணபபன் அரண்மனை என்றழைக்கப்படும் பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறி உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியேறினார். அவர் வெளியேறிய சில மணிநேரத்திற்குள் பிரதமர் இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர். மேலும் படிக்க | பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு... வங்கதேச போராட்டக்காரர்கள் ஆவேசம் - காரணம் என்ன? பிரதமர் இல்லத்தை மொத்தமாக சூறையாடிய இளைஞர்கள் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்தனர். 1500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கிருந்த ஃபர்னிச்சர்கள், கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். குறிப்பாக, வீட்டில் இருந்த ஷேக் ஹசீனா பயன்படுத்திய பொருள்களையும் பொதுமக்கள் தூக்கிச்செல்லும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. உள்ளாடைகளை திருடிச்சென்ற மக்கள் ஃபிரிட்ஜில் இருந்து பச்சை மீனையும், அலுவலகத்தில் இருந்த ஃபர்னிச்சர்களையும் அவர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். மாலை வரை அந்த பிரமதர் இல்லத்தில் இருந்து மக்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். அங்கிருந்த டிவி, கம்பிளி, ஜிம் உபகரணங்கள், சூட்கேஸ் ஆகியவற்றை கூட அவர்கள் விடவில்லை. இவை மட்டுமின்றி ஷேக் ஹசீனாவின் உள்ளாடைகள், சேலைகள், பிளவுஸூகள் ஆகியவற்றை இளைஞர்கள் கொண்டு செல்வதையும் புகைப்படங்களில் பார்க்க முடிந்தது. அதிலும் ஒருவர் ஷேக் ஹசீனாவின் சேலையை அணிந்துகொண்டு கையில் இருக்கும் பக்கெட்டில் ஹசீனாவின் உடைகளை நிரப்பிவைத்துக் கொண்டுசெல்வதையும் பார்க்க முடிந்தது. Where is humanity This is totally disgusting Murder of democracy Radicals looted bra, fish, saree, blouse, evn dustbins from Sheikh Hasina's residence. One ri0ter even wore a saree. They have looted utensils from her kitchen. pic.twitter.com/r2yFeTSqd9 — Thakur Abhi (@ThakurAbhi3880) August 5, 2024 ஒரு இளைஞரோ தனது இரண்டு கைகளிலும் பிராக்களை வைத்திருக்கும் வகையிலும், மற்றொரு இளைஞர் சேலையின் பிளவுஸை பிடித்தாவரும் இருக்கும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளது. ஷேக் ஹசீனா எங்கே? வங்கதேசத்தில் இருந்து விமானப்படையின் விமானம் மூலம் புறப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். வங்கதேசத்தின் C-130J என்ற விமானப்படை விமானம் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்ததில் இருந்து ரேடார் மூலம் அந்த விமானம் கண்காணிக்கப்பட்டது. கொல்கத்தா வழியாக உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் அவரது விமானம் வந்திறங்கியது. நேற்று மதியம் 2.30 மணியளவில் வங்கதேசத்தில் இருந்து புறப்பட்ட ஹசீனா மாலை இந்தியா வந்தார். தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து அதன் அடுத்த இலக்கு நோக்கி புறப்பட்டது. ஷேக் ஹசினா இங்கிலாந்தில் தஞ்சமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க | Khaleda Zia: நாட்டை விட்டு ஓடிய பிரதமர்! சிறையில் இருந்து வெளியே வரும் முக்கிய புள்ளி! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.