TAMIL

ஓய்வூதியதாரர்கள் ஹேப்பி: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வீடூ தேடி வரும் சேவை... தபால் துறை அதிரடி

Life Certificate: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமாண் எனப்படும் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான சாளரம் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் இந்த வாழ்க்கைச் சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் தடையின்றி கிடைத்துக்கொண்டே இருப்பதை அவர்கள் உறுதிபடுத்திக்கொள்ளலாம். Pensioners: ஓய்வூதியதாரர்கள் வங்கிக்குச் செல்லாமலேயே வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? ஓய்வூதியம் பெறுவோர் வங்கிக்குச் செல்லாமலேயே தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறை, அதன் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் வாழ்க்கைச் சான்றிதழ் சேவையை உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வருகிறது. இதன் மூலம் முதியவர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை டெபாசிட் செய்யலாம். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். தபால்காரர் மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் - இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் இணையதளம் மூலம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை டெபாசிட் செய்ய தபால்காரரை வீட்டிற்கு அழைக்கும் கோரிக்கையை நீங்கள் வைக்கலாம். - இந்த சேவையில், தபால்காரர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வாழ்க்கை சான்றிதழை டெபாசிட் செய்வார். - இந்த டோர்ஸ்டெப் சேவை 2020 இல் தொடங்கப்பட்டது. - மொபைல் மூலம் இந்தச் சேவையைப் பெற, ஓய்வூதியம் பெறுவோர் கூகுள் பிளேஸ்டோரிலிருந்து PostInfo செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். - ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண், மொபைல் எண், வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு எண் மற்றும் பிபிஓ எண் ஆகியவற்றை இதற்கு வழங்க வேண்டும். Doorstep Service: இந்த சேவை யாருக்கு கிடைக்கும்? டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் (Jeevan Pramaan) என்பது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான பயோமெட்ரிக் இயக்கப்பட்ட டிஜிட்டல் சேவையாகும். மத்திய அல்லது மாநில அரசு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது DLC க்கு ஆக்டிவ்வாக இருக்கும் ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சியின் ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பெறலாம். இந்த ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க, ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சியின் அலுவலகத்திற்கு நேராகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக அவர்கள் DLC ஐ உருவாக்க ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் அங்கீகார பொறிமுறையைப் பயன்படுத்தலாம். மேலும் படிக்க | Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம் அஞ்சல் துறையின் (DoP), பெரிய அஞ்சல் வலையமைப்பைப் பயன்படுத்தி, ஓய்வூதியம் பெறுவோருக்கு வீட்டு வாசலில் சேவையை வழங்கும் அதன் திறன் மூலம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) இப்போது ஒருங்கிணைப்பு அடிப்படையில் DLC ஐ உருவாக்கும் வசதியை வழங்குகிறது. இந்த செயலி இந்திய அரசாங்கத்தின் தேசிய தகவல் மையத்தால் (NIC) வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. DLC Service: DLC சேவை என்றால் என்ன? - இந்த சேவை IPPB மற்றும் IPPB அல்லாத வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். - டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் (DLC) சேவையைப் பெற, வாடிக்கையாளர் அருகில் உள்ள தபால் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது தபால்காரர்/கிராமப்புற அஞ்சல் ஊழியரை வீட்டிற்கு வருமாறு கோரலாம். - போஸ்ட் இன்ஃபோ செயலி அல்லது இணையதளம் மூலம் தபால்காரரின் டோர்ஸ்டெப் சேவைக்கான கோரிக்கைகளை திட்டமிடும் வசதியையும் அஞ்சல் துறை வழங்கியுள்ளது. - DLC ஐ வழங்குவது முற்றிலும் காகிதமற்ற மற்றும் தொந்தரவு இல்லாத செயல்முறையாக இருக்கும். - மேலும் இதன் மூலம் வாழ்க்கை சான்றிதழ் உடனடியாக உருவாக்கப்படும். - இதற்குப் பிறகு, ஒரு பிரமாண் ஐடி உருவாக்கப்பட்டு, அது, என்ஐசி மூலம் ஓய்வூதியதாரர்களுடன் நேரடியாகப் பகிரப்படுகிறது. - பிரமாண் ஐடி உருவாக்கப்பட்டவுடன், ஓய்வூதியம் பெறுவோர் டிஎல்சி -ஐ என்ற இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - DLC -ஐ வெற்றிகரமாக உருவாக்க ரூ.70 (ஜிஎஸ்டி/செஸ் உட்பட) பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. - டோர்ஸ்டெப் சேவையை வழங்க, IPPB அல்லது IPPB அல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது. Digital Life Certificate: இதை உருவாக்க இவை எல்லாம் தேவை - ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். - ஓய்வூதியம் பெறுவோரிடம் மொபைல் எண் இருக்க வேண்டும். - ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்தில் (வங்கி/அஞ்சல் அலுவலகம் போன்றவை) ஆதார் எண்ணை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் படிக்க | ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்! இதை செய்யாவிட்டால் கார்ட் நீக்கப்படும்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.