TAMIL

பெண்களுக்கு பம்பர் வருவாய்: மோடி அரசின் அசத்தல் திட்டம்..... இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

Mahila Samman Savings Certificate: பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களது தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் 2023 இல் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை (MSSC) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பெண்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. இந்த திட்டம் தொடர்பான ஒரு முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம். MSSC: 43,30,121 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன அக்டோபர் 10, 2024 வரை MSSC திட்டத்தின் கீழ் 43,30,121 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று டிசம்பர் 3 அன்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் அறிவித்தார். இந்த அரசாங்க முயற்சியை நீங்களும் பயன்படுத்திக்கொள்ள விருப்பமா? இதற்கான செயல்முறைகளை பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். அதை பற்றி இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம். MSSC: பெண்களுக்கான பிரத்யேக திட்டம் எம்எஸ்எஸ்சி திட்டத்தின் கீழ், பெண்கள் அனைவரும் தன் பெயரில் கணக்கை சுதந்திரமாகத் திறக்கலாம். ஒரு மைனர் பெண் இதில் கணக்கை திறக்க வேண்டுமானால், அவரது சார்பாக குடும்ப உறுப்பினர் அல்லது பாதுகாவலர் கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும். Mahila Samman Savings Certificate: திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன? - குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை: இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சத் தொகை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். - இந்த திட்டத்தின் கால அளவு இரண்டு ஆண்டுகள் ஆகும். - வட்டி விகிதம்: இந்தத் திட்டம் 7.5% வருடாந்திர வருமானத்தை வழங்குகிறது. - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும். MSSC: திட்டத்திக்லிருந்து பணத்தை எடுப்பது எப்படி? - கணக்கைத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகும் முதலீட்டாளர் பணத்தை எடுக்கலாம். - இதற்கு முன், கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தாலோ அல்லது ஏதேனும் அவசர நிலையை காரணம் காட்டியோ கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். - வழக்கமாக, இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு, முழுப் பணமும் வட்டியுடன் சேர்த்து கணக்கில் வரவு வைக்கப்படும். MSSC: இதில் கணக்கை எப்படி திறப்பது? MSSC -இல் ஒரு கணக்கைத் திறப்பதும் மிகவும் எளிதானது. இதற்கு முதலீட்டாளர் தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கைத் தொடங்குவதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதனுடன் ஆதார் அல்லது பான் கார்டு போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு அனைத்து வங்கிகளிலும் கணக்கைத் திறக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பிஎன்பி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வங்கிகளில் முதலீட்டாளர்கள் தங்கள் கணக்குகளை திறந்துகொள்ளலாம். மேலும் படிக்க | ஏடிஎம்மில் நடக்கும் மிகப்பெரிய மோசடி! பணம் எடுக்கும் போது உஷார்! Mahila Samman Savings Certificate: ஆன்லைனில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) கணக்கை திறப்பது எப்படி? - இந்த கணக்கை திறக்க நீங்கள் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். - அல்லது, ஒரு மைனர் பெண்ணின் பாதுகாவலராக இருக்க வேண்டும். - அதிகாரப்பூர்வ இந்தியா போஸ்ட் இணையதளம் அல்லது பங்கேற்கும் வங்கியின் இணையதளத்திற்குச் செல்லவும் (எ.கா. பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா). - உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை சரிபார்க்கும் செயல்முறைக்காக பதிவேற்றவும். - தேவையான தகவல்களை அளித்து, முதலீட்டுத் தொகையைத் (ரூ.1,000 முதல் ரூ.2 லட்சம் வரை) தேர்ந்தெடுத்து, படிவத்தைச் சமர்ப்பிக்கவும். - KYC செயல்முறைக்கு ஆதார், பான் மற்றும் முகவரிச் சான்று போன்ற தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும். - நெட் பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தவும். - கணக்கு செயல்படுத்தப்பட்டவுடன், அதாவது ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் கணக்கு விவரங்கள் மற்றும் ஒப்புகையைப் பெறவும். - உங்கள் கணக்கு மற்றும் வட்டித் தொகை விவரங்களை அவ்வப்போது ஆன்லைனில் கண்காணிப்பது நல்லது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும். இதற்குள் இதில் விண்ணப்பித்து பெண்கள் தங்களுக்கான இந்த பிரத்யேக திட்டத்தின் பலனை பெறலாம். மேலும் படிக்க | கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸுக்கு சூப்பர் செய்தி: இனி இவர்களுக்கும் EPFO ஓய்வூதியம் கிடைக்கும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.