TAMIL

ஓய்வு காலத்தில் ஹேப்பியாக வாழலாம்... இப்படி முதலீடு செய்தால் 55 வயதிலேயே கோடீஸ்வரர் ஆகலாம்!

Retirement Planning, PPF Investment Calculation: ஓய்வுக்கு பின்னர் நிம்மதியான வாழ்க்கை வாழுவும், உங்களின் அடுத்த சந்ததியினர் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை அனுபவிக்காமல் இருக்கவும் இன்றே முதலீட்டையும், சேமிப்பையும் தொடங்க வேண்டியது அவசியம். மாத வருமானத்தில் முதலீட்டிற்கு பணத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தாலும் அந்த சகித்துகொண்டு தொடர்ந்து சேமித்து வந்தால், சிறிய விதை நாளை ஆலமரமாக வளர்ந்து நிற்கும். அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வந்தால் நிச்சயம் ஓய்வு காலத்திற்கு பின்னர் எவ்வித பிரச்னையும் இருக்காது. அதாவது இதில் நீங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தால் ஓய்வு காலத்தில் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். அது எப்படி, அதற்கு இருக்கும் மூன்று வழிகள் என்ன என்பதை இதில் விரிவாக காணலாம். பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் 60 வயதில்தான் ஓய்வு காலம் வரும். ஆனால், நீங்கள் இந்த முதலீட்டு உங்களின் 30 வயதில் இருந்து தொடர்ந்து செய்து வந்தால் 55 வயதிலேயே நீங்கள் ஓய்வுபெற்றுவிடலாம். அப்போதே உங்கள் கையில் கோடி ரூபாய் இருக்கும். இது சற்று கடினம் ஆகும் என்றாலும் நீண்ட கால பலனை தரவல்லது. PPF திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 1,50,000 ரூபாய்தான் முதலீடு செய்ய இயலும். அதாவது ஒரு மாதத்திற்கு 12 ஆயிரத்து 500 ரூபாய். இதனை நீங்கள் 25 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தாலே போதுமானது. தற்போது இதற்கு வருடாந்திர வட்டி விகிதம் 7.1 ஆக உள்ளது. இது முதிர்ச்சி பெற 15 ஆண்டுகள் ஆகும் என்றாலும் அதில் மற்றொரு சூட்சமும் உள்ளது. மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்கள் ஹேப்பி: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வீடூ தேடி வரும் சேவை... தபால் துறை அதிரடி 55 வயதில் கோடீஸ்வரர் ஆக மூன்று வழிகள் முதலாவது வழி: நீங்கள் உங்களின் 30 வயதில் இருந்து மாதத்தோறும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு 12,500 ரூபாய் முதலீடு செய்தால், கடைசியாக 40 லட்சத்து 68 ஆயிரத்து 409 ரூபாய் இருக்கும். இதனை மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டியுங்கள். அப்போது 66 லட்சத்து 58 ஆயிரத்து 288 ரூபாய் சேர்ந்திருக்கும். அதுவே மேலும் ஒரு முறை நீட்டித்தால் (மொத்தம் 25 ஆண்டுகள்) 1 கோடயே 3 லட்சத்து 8 ஆயிரத்து 15 ரூபாய் கிடைக்கும். நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். இரண்டாவது வழி: மாதந்தோறும் வெறும் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தும் 55 வயதிலேயே நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். ஆனால் அதற்கு நீங்கள் 25 வயதில் முதலீடு செய்ய தொடங்க வேண்டும். நீங்கள் முதலில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்தால் மொத்தமாக 32 லட்சத்து 54 ஆயிரத்து 567 ரூபாயை பெறுவீர்கள். இதனை அடுத்து 5-5-5 ஆண்டுகள் என மேலும் 15 ஆண்டுகள் இதனை நீட்டிக்கும்பட்சத்தில், மொத்தம் 30 ஆண்டுகளில் மொத்தமாக 1 கோடியே 23 லட்சத்து 60 ஆயிரத்து 728 ரூபாயை பெறுவீர்கள். மூன்றாவது வழி: இதிலும் நீங்கள் 55 வயதிலேயே கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் 20 வயதில் இருந்தே மாதந்தோறும் 7,500 ரூபாய் கட்டினால் ரூ.24 லட்சத்து 40 ஆயிரத்து 926 ரூபாயை பெறலாம். தொடர்ந்து 5-5-5-5 என மொத்தம் 35 ஆண்டுகளில் 1 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரத்து 714 ரூபாயை பெறுவீர்கள். இவை அனைத்தும் தற்போதைய வட்டி விகிதமான 7.1% படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க | Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.