TAMIL

எச்சரிக்கை... இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கிடுங்க

டிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. அந்த வகையில் ஆபத்தான செயலி குறித்த தகவலை சைபர் பாதுக்காப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் மக்களின் கிரிப்டோகரன்சியை திருடும் ஆபத்தான செயலியை சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த செயலி 5 மாதங்களாக ஹிட்டன் நிலையில் வைக்கப்பட்டு இருந்ததால் யாருக்கும் இது பற்றி தெரியவில்லை. கடந்த 2024 மார்ச் மாதத்தில் தான் Google Play இல் சேர்க்கப்பட்டது. வாலட் கனெக்ட் - ஏர் டிராப் வாலட் WalletConnect - Airdrop Wallet என்ற ஆபத்தான செயலி ஆண்ட்ராய்டு போன் பயனர்களை குறிவைப்பதாக செக் பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது. இந்த செயலி , முறையான Web3 செயலியாக தோற்றம் அளிப்பதன் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் கிரிப்டோகரன்சியை திருடுகிறது. போலியான செயலி இந்த மக்களை ஏமாற்றுவதற்காக WalletConnect என்ற உண்மையான செயலியின் பெயரைப் பயன்படுத்தியது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவரக்ளிடம் இருந்து, கடந்த 5 மாதங்களில் சுமார் ரூ.58 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளை ஹேக்கர்கள் மக்களிடம் இருந்து திருடியுள்ளனர். மக்களை ஏமாற்ற, இந்த ஆப் செயற்கையாக நல்ல ரேட்டிங் கொடுத்து, சிறந்த மதிப்புரைகளை எழுதியது. இதன் காரணமாக இந்த செயலி தேடலின் போது முதலிடத்தில் வந்தது. இதன் மூலம் 10,000க்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். பெருமபாலானோர் வேலெட் எனப்படும் செயலியின் பழைய பதிப்பை வைத்திருந்த நிலையில், அவை சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இந்த பிரச்சனைகளை சாதகமாக பயன்படுத்தி, ஹேக்கர்கள் தங்கள் போலி செயலி தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்கள். இந்த ஆபத்தான WalletConnect பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து திறக்கும் போது, ​​அவர்களது கிரிப்டோ வாலட்டைச் சேர்க்கும்படி கேட்கப்பட்டது. மேலும் படிக்க | உங்கள் போனில் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை ஹேக்கர்கள் பின்னர் மக்களை ஏமாற்றுவதற்காக உண்மையான கிரிப்டோகரன்சி இயங்குதளங்களைப் போன்ற வலைத்தளங்களையும் செயகலிகளையும் உருவாக்கினர். அவர்களின் வலையில் விழுந்து, மக்கள் தங்கள் வேலெட்டிலல் இருந்து பணத்தை மாற்ற அனுமதி அளித்தனர், இதன் காரணமாக ஹேக்கர்கள் அவர்களின் கிரிப்டோகரன்சியை திருடினர். பணம் திருடப்பட்டவர்களில், சுமார் 20 பேர் இந்த செயலியை பற்றி மோசமான மதிப்புரைகளை கூகுள் பிளே ஸ்டோரில் குறிப்பிட்டனர். ஆனால் இந்த செயலி ஆபத்தானது என்பதை மக்கள் அறியாத வகையில் ஆப்ஸ் தயாரிப்பாளர்கள் பல போலியான நல்ல மதிப்புரைகளை விரைவாக எழுதினர். இதன் மூலம் மேலும் பலரை ஏமாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலானோர், நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்கிறோம். கட்டணம் செலுத்துவது, டிக்கெட்டுகள் புக் செய்வது என பல பணிகள் ஆன்லைனில் மேற்கொள்கிறோம். இணைய சேவைகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. எனினும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் படிக்க | மொபைல் போனை பாதிக்கும் ஆபத்தான வைரஸ்... இந்த செயலிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.