TAMIL

கொல்கத்தாவில் கொடூரம்! 7 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

Kolkata Rape Case: தங்குமிடம் இல்லாத குடும்பங்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லாத நடைபாதை குடியிருப்புகளில் வசிக்கும் தம்பதியின் 7 மாத குழந்தையை கொல்கத்தாவில் நடைபாதையில் கடத்தப்பட்டு கொடூர பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது. நாடு முழுவதும் குழந்தை வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமைகள் பலவற்றை சந்தித்து வருவதாக குற்றம் எழுந்துள்ளது..இதன் முழு விவரம் இங்குப் பார்க்கலாம் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 7 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோட்டில் நடைபாதையில் வசித்து வரும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்கிடமாக இருந்தாலும், அவர்களின் வயிற்று பிழைப்பிற்குக் கையேந்தி சாப்பிடும் இவர்களுக்கு இதுபோன்று நிகழ்வு நடந்ததால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தங்கும் வீடு இல்லாமல் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது தம்பதிகளின் மகளான 7 மாத குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருப்பவர்கள் உடனே சென்று குழந்தையை மீட்டு காவல்துறைகளுக்குத் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த கொல்கத்தா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்: வன்கொடுமை செய்த சிறுமியின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர் உடலில் காயம் அடைந்த பாகங்களை ஆராய்ச்சி செய்தனர். அப்போது மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல் போலீஸாரை அதிர்ச்சி அளிக்க வைத்தது. சிறுமியின் உடலில் பல இடங்களில் கீறல்கள் இருந்ததாகவும், இது பாலியல் துன்புறுத்தலைக் குறிக்கிறது என்று மருத்துவர்கள் கூறினர். உடனே கொல்கத்தா போலீஸ் விசாரணையைத் தீவரமாக்கத் தொடங்கினர். மேலும் படிக்க | சொந்த குடும்பத்தையே படுகொலை செய்த 20 வயது இளைஞர்! உறைய வைக்கும் சம்பவம்.. போலீஸ் விசாரணை: இச்சம்பவம் நவம்பர் 30 ஆம் தேதி அன்று நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஒரு நபர் புர்டோல்லா காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது வீட்டிற்கு வெளியே நடைபாதையில் ஒரு சிறுமி தனியாகப் படுத்துக் கொண்டு அழுதுகொண்டிருப்பதாகப் புகார் அளித்துள்ளார். அப்போது நடைபாதையில் வசிக்கும் இரண்டு பேர் ஏழு மாத மகளைக் காணவில்லை என்று கூறியிருந்ததாக போலீஸூக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீஸார் தீவிர விசாரணை செய்து சீசிடிவி காட்சிகளில் பதிவான நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.கொல்கத்தாவில் ஷியாம்பஜார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வரும் 35 வயது இளைஞர் சிறுமி தனியாக இருக்கும் நேரம் பார்த்து பாலியல் வன்கொடுமை செய்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் வன்கொடுமை செய்த நபரை போலீசார் ஜார்காம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லவ்பூர் காவல் நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையின் நிலை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைத் தற்போது ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்படைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. மேலும் படிக்க | மருத்துவ மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடூரம்... கண்ணீர் கடலில் பெற்றோர் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.