TAMIL

உடல் எடையை பட்டுனு குறைக்க... இந்த 4 உணவுகள் ரொம்ப முக்கியம் - அடிக்கடி சாப்பிடுங்க

Best Foods For Rapid Weight Loss: நீங்கள் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் உணவுப் பழக்கவழக்கத்திலும் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். உணவுப் பழக்கவழக்கம்தான் உங்களின் உடல் எடையை பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும். அதை தாண்டி ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தொடர்ச்சியான பயிற்சிகள் ஆகியவை நீங்கள் நினைத்து உடல் கட்டமைப்பை உங்களுக்கு கொடுக்கும். அப்படியிருக்கையில், உணவுகளில் நீங்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும், இல்லையென்றால் மற்ற அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என்பதை மறக்காதீர்கள். அதிக கலோரிகள் கொண்ட உணவு, பதப்படுத்தப்ட்ட உணவு ஆகியவற்றை நிச்சயம் தொடவேக் கூடாது. அதேபோல், பசியற்ற நேரங்களில் நொறுக்குத் தீனிகளை உண்பது, நேரம் காலம் இல்லாமல் உண்பது ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், ஊட்டச்சத்து நிறைந்த, வயிற்றுக்கு நிறைவை அளிக்கும் உணவுகளை தேர்வு செய்வது உங்களின் உடல் எடை குறைப்பு பயணத்தில் பெரியளவில் கைக்கொடுக்கும். அதாவது, ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற உணவுகள் உங்களுக்கு பசியை கட்டுப்படுத்தும். வயிறுக்கு நிறைவை அளிக்கும். நீங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ப உடல் எடையை குறைக்கிறீர்கள் என்றால் நிச்சயம் வயிற்றுக்கு நிறைவை அளிக்கும் உணவுகளை தேடி தேடிச் சாப்பிடுங்கள். அந்த வகையில், உங்களின் உடல் எடை குறைப்புக்கு பயன் அளித்து, வயிற்றுக்கு நிறைவான உணர்வை தரும் நான்கு உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த உணவுகளை ஆரோக்கியமான முறையில் உண்டால் பலன் உங்கள் கை மேல் வரும். மேலும் படிக்க | சர்க்கரைக்கு ‘நோ’ வெல்லத்துக்கு ‘எஸ்’? ஜாக்கிரதை!! உங்களுக்கு தான் இந்த பதிவு ஓட்ஸ் இதில் புரதச்சத்து, நார்ச்சத்து நிரம்பியிருக்கிறது. இது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்க செய்யும். மெதுவாக செரிமானமாகும், இதன் கார்போஹைரேட்ஸ் நீடித்த ஆற்றலை தரும். நேரங்கெட்ட நேரத்தில் பசி எடுக்காது. எனவே உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடை குறைப்பை தீவிரப்படுத்தவும் ஓட்ஸை உங்களின் உணவுப்பழக்க வழக்கத்தில் நிச்சயம் சேர்த்துக்கொள்ளுங்கள். பன்னீர் சைவ உணவு பிரியர்களுக்கும், அசைவ உணவு பிரியர்களுக்கும் ஒருங்கே பிடித்த உணவுகளில் பன்னீர் முக்கிய இடத்தை பிடிக்கும். அந்தளவிற்கு பன்னீர் பலருக்கும் பிடிக்கும். இது உடல் எடை குறைப்புக்கும் உங்களுக்கு கைக்கொடுக்கும். குரைந்த கலோரி மற்றும் அதிக புரதச்சத்து உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவை உண்டாக்கும். நொறுக்குத் தீனியை சாப்பிட வேண்டும் என ஆசையை தூண்டாது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி கலோரிகளை கரைக்க பன்னீரில் உள்ள Casein புரதம் உதவும். எனவே, பன்னீரை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்ணுங்கள். சூப்கள் காய்கறி சூப் தொடங்கி ஆட்டுக்கால் சூப் வரை குறைந்த கலோரி கொண்ட சூப்களை குடிப்பது உடல் எடை குறைப்புக்கு பெரிய பலனை கொடுக்கும். இவற்றில் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்பதால் உடனே வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். குறைந்த கலோரியில் வயிறு நிறைவை தருவதால் உடல் எடை குறைப்பில் சூப்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதில் கனிமங்கள், வைட்டமிண்கள், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எனலாம். இது தேவையற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க உதவும். அந்தளவிற்கு வயிறு நிறைவை உண்டாக்கும். நீர்ச்சத்து நிறைந்தது, குறைந்த கலோரியும் கொண்டது. எனவே உடல் எடை குறைப்புக்கு பக்காவான ஸ்நாக்ஸ்தான் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு. (பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனை ஜீ நியூஸ் Tamil News) உறுதிப்படுத்தவில்லை) மேலும் படிக்க | கெட்ட கொழுப்புக்கு குட்பை சொல்ல இந்த எளிய உணவுகள் உதவும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.