Healthy lifestyle News Tamil : நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமல்ல, ஆரோக்கியமாக வாழ்வது மிகவும் அவசியம். அந்த விஷயத்தை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், வீட்டுப் பொறுப்புகள் காரணமாக பெண்களால் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆனால் எந்த வயதிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பேணி, நோய்களைத் தவிர்த்து, முதுமையைத் தடுக்கலாம். எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். உடற்பயிற்சி பொதுவாக, உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு சிறந்த இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய நோய், நீரிழிவு மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயமும் குறைகிறது. இது பெண்களுக்கான மெனோபாஸ் காலத்திலும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வைத்து, பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் வாரத்திற்கு 4-5 நாட்கள், தினமும் 30-60 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் படிக்க | நீரிழிவு நோய் முதல் எடை இழப்பு வரை: அத்திப்பழத்தின் அட்டகாசமான நன்மைகளின் லிஸ்ட் இதோ போதுமான தூக்கம் நவீன வாழ்க்கை முறையால், பல பெண்களுக்கு இரவில் நல்ல தூக்கம் கிடைப்பது கடினமாகி வருகிறது. ஆனால் விஷயம் என்னவென்றால், நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் உள்ள மற்ற விஷயங்களைப் போலவே தூக்கத்திற்கும் அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் போதுமான அளவு தூக்கம் எடுத்துக் கொள்வது தான் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் உற்பத்தித் திறனுடன் இருக்க உதவுகிறது. ஆனால் அதனை பெரும்பாலான பெண்கள் செய்வதில்லை என்பது நிதர்சனமாக இருக்கிறது. உங்கள் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய உடல் நல பாதிப்புகள் ஏதும் வராது மருத்துவ பரிசோதனை உடல்நிலை சரியில்லாத போது மட்டும் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒவ்வொரு வருடமும் வருடாந்தரப் பரிசோதனை செய்துகொண்டால், எந்த ஒரு தீவிர நோய் வந்தாலும் சீக்கிரம் சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வர முடியும். இந்த சோதனையின்போது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக அளவு இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற அடிப்படை விஷயங்களை மருத்துவர் பரிசோதித்து அறிவுரை வழங்குவார். அப்போது அதன் மீது கவனம் செலுத்தி பெரிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உணவில் கவனம் செலுத்துங்கள் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவு என்றால் சுவையற்ற உணவு அல்ல. மாறாக, இது புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உள்ளடக்கிய உணவு. நீங்கள் அதில் பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து தினமும் சாப்பிடலாம். முடிந்தவரை முழு தானியங்கள் சேர்த்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளுக்கும் உணவை திட்டமிட்டு பட்டியல் போட்டு சாப்பிடுங்கள். எந்தசூழ் நிலையிலும், பேக் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதை கூடுமானவரை தவிர்க்கவும். உங்களுக்கு பிடித்ததை செய்யவும் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், முடிந்தளவு ஒருநாளைக்கு ஒரு அரைமணி நேரமாவது சிரிக்கவும் நேரம் ஒதுக்கவும். அதாவது நண்பர்களுடன் உரையாடுவது, உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்வது, அதாவது செடிகளை நடுவது, தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளையும் செய்ய வேண்டும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
ஓய்வு காலத்தில் ஹேப்பியாக வாழலாம்... இப்படி முதலீடு செய்தால் 55 வயதிலேயே கோடீஸ்வரர் ஆகலாம்!
November 5, 2024மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு.. நீண்ட கால கோரிக்கை.. ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல செய்தி
November 5, 2024What’s New
Spotlight
வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!
- by Sarkai Info
- November 5, 2024
Today’s Hot
-
- November 5, 2024
-
- November 5, 2024
-
- November 5, 2024
Featured News
Latest From This Week
ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்! இதை செய்யாவிட்டால் கார்ட் நீக்கப்படும்!
TAMIL
- by Sarkai Info
- November 5, 2024
அமரன் படத்தில் சாதிய குறியீடு இல்லாத சர்ச்சை..இயக்குநர் கொடுத்த நச் பதில்!
TAMIL
- by Sarkai Info
- November 5, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.