TAMIL

பெண்களுக்கு LICயில் வேலை வாய்ப்பு... மாதம் ரூ.7000 உதவித்தொகையுடன் பயிற்சி

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. கடந்த வாரம், டிசம்பர் 9ம் தேதி, பிரதமர் மோடி எல்ஐசியின் பீமா சகி யோஜனாவைத் தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் சேரும் பெண்களுக்கு பீமா சகி என்ற பெயரில் மூன்று வருடங்கள் சிறப்புப் பயிற்சியும் உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதும், பெண்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை அதிகரிப்பதும் ஆகும். எல்ஐசி பீமா சகி யோஜனா திட்ட விபரங்கள் எல்ஐசி பீமா சாகி யோஜனாவின் பலன்களைப் பெற நீங்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதையும், பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும் என்பதையும், பிற விபரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ளலாம். பீமா சகி திட்டம் என்றால் என்ன? எல்ஐசி பெண்களுக்காக பீமா சகி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பீமா சகி திட்டத்தின் கீழ், 18 முதல் 70 வயது வரையிலான பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். ஆனால், இத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேரும் பெண்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது, ​​காப்பீட்டின் அவசியம் உள்ளிட்ட காப்பீடு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும். எல்ஐசி முகவராக ஆவதற்கான வாய்ப்பு பீமா சகி திட்ட பயிற்சியின் போது பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் உதவித்தொகையும் வழங்கப்படும். தனது பயிற்சியை முடித்தவுடன், எல்ஐசி முகவராக பணியாற்ற முடியும். அதே சமயம், பி.ஏ. தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மேம்பாட்டு அதிகாரிகளாகும் வாய்ப்பும் கிடைக்கும். விகஸித் பாரத் 2047 என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் பெண்கள் அதிகாரம் மற்றும் நிதி பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பெண்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. பீமா சகி திட்டத்தில் பெண்களுக்கு கிடைக்கும் உதவித் தொகை விபரம் பீமா சகி திட்டத்தின் மூலம் 25,000 பெண்களுக்கு பீமா சகி திட்டத்தில் சேரும் பெண்களுக்கு பயிற்சியின் முதல் ஆண்டில் ரூ.7000, இரண்டாம் ஆண்டில் ரூ.6000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ.5000 என்ற அளவில் உதவித்தொகை வழங்கப்படும். அதாவது பயிற்சி காலத்தில் பெண்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். இது தவிர, பெண்களுக்கு போனஸ் மற்றும் கமிஷன் சலுகையும் வழங்கப்படும். மேலும் படிக்க | EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசு பீமா சகி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை 1. எல்ஐசியின் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் 2. பின்னர், 'Click here for Bima Sakhi' என்பதைக் கிளிக் செய்யவும். 3. இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும். 4. உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் முகவரி உட்பட அனைத்து விவரங்களையும் இங்கே நிரப்பவும். 5. நீங்கள் ஏதேனும் எல்ஐசி முகவர்/வளர்ச்சி அதிகாரி/ஊழியர்/மருத்துவ பரிசோதகருடன் தொடர்புடையவராக இருந்தால், அவருடைய விவரங்களையும் உள்ளிடவும். 6. பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, செயல்முறையை முடிக்க 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.