TAMIL

முதல்வராகும் தேவேந்திர ஃபட்னாவிஸ்... மகாராஷ்டிராவில் பரபரப்பு - ஏக்நாத் ஷிண்டேவின் கதி என்ன?

Maharashtra Chief Minister Devendra மகாராஷ்டிராவில் உள்ள மொத்த 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ. 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து நவ. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும் என்பது உறுதியானது. தனி ஒரு கட்சிக்கு பெரும்பான்மை உறுதியாகவில்லை என்றாலும் பாஜக மட்டும் 132 தொகுதிகளை கைப்பற்றியதால், பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், முதல்வரை அறிவிப்பதில் தொடர்ந்து இழுப்பறி ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே காபந்து முதல்வராக செயல்பட்டாலும் அவரே அடுத்த 5 ஆண்டுகளும் முழுமையாக ஆட்சி செய்வாரா அல்லது தேவேந்திர ஃபாட்னாவிஸை பாஜக முதல்வராக அறிவிக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள மகாராஷ்டிரா பாஜக கூட்டணி கட்சிகள் டெல்லியில் முகாமிட்டிருந்தன. கூடவே, பாஜக கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், தேவேந்திர ஃபாட்னாவிஸ்தான் முதல்வராக பதவியேற்பார் என கூறியது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு மகாராஷ்டிர பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்திற்கான மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி ஆகியோரை பாஜக தேசிய தலைமை நியமனம் செய்தது. பாஜகவுக்கு முதல்வர் பொறுப்பு ஒதுக்கப்படும்படும்பட்டத்தில், இவர் பரிந்துரைக்கு நபரே பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார், அவரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பார் என கூறப்பட்டது. மேலும் படிக்க | ஒரு ரூபாயை கூட ஒதுக்காத மத்திய அரசு - காலியாக இருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி... அதிர்ச்சி! இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. முன்னதாக பாஜக தலைமை நியமித்த குழு தேவேந்திர ஃபாட்னாவிஸை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய, அந்த கூட்டத்திலேயே அவர் பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். Devendra unanimously elected as the Leader of Maharashtra BJP Legislative Party. pic.twitter.com/015hrTDxtn — ANI (@ANI) December 4, 2024 இதைத் தொடர்ந்து, நாளை நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் தேவேந்திர ஃபாட்னாவிஸ் முதல்வராக பதவி பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்த பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக தேவேந்திர ஃபாட்னாவிஸை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். ஏக்நாத் ஷிண்டேவின கதி என்ன? பாஜக கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை வென்று பலம் பெற்றிருக்கிறது. அதில் பாஜக 148 தொகுதிகளில் போட்டியில் 132 தொகுதிகளை வென்றுள்ளது. எனவே, கடந்த முறை போல் இல்லாமல் முதல்வர் பதவியை தம்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவெடுத்திருக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டாலும், அவரே பொதுவெளியில் பாஜக ஆட்சியமைப்பதில் தான் குறுக்கிட மாட்டேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கு கட்டுப்படுவேன் எனவும் தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்கும் இடத்தில் ஏக்நாத் ஷிண்டே இல்லாத காரணத்தால் பாஜகவே முதல்வர் பொறுப்பை தாமாக பெற்றிருக்கிறது. இருப்பினும், நாளைய பதவியேற்பு விழாவில் அமைச்சர்களும் பதவியேற்பார்களா, கடந்த ஆட்சியை போல துணை முதல்வர்கள் இடம்பெறுவார்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு துணை முதல்வர்கள் பதவியேற்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க | மருத்துவ மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடூரம்... கண்ணீர் கடலில் பெற்றோர் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.