TAMIL

வீடு வீடாக உணவு டெலிவரி செய்யும் Zomato CEO மற்றும் அவரது மனைவி!

பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான Zomato-வின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் மற்றும் அவரது மனைவி கிரேசியா முனோஸ் ஆகியோர் டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ள தெருக்களில் ஒருநாள் டெலிவரி ஏஜெண்டுகளாக மாறி உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தீபிந்தர் கோயல் ஒருநாள் Zomato டெலிவரி பாயாக மாறிய தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது மனைவியுடன் பைக்கில் Zomato சீருடை அணிந்து, இருவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஆர்டர்களை பெற்று டெலிவரி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க | முயலை உயிரோடு முழுங்கும் கடல் புறா வீடியோ வைரல் "சில நாட்களுக்கு முன்பு ஆர்டர்களை டெலிவரி செய்ய வெளியே சென்றேன், உடன் எனது மனைவியும் இருந்தார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பலர் ரசித்தாலும், சிலர் தீபிந்தர் கோயலின் இந்த செயலை ரசிக்கவில்லை. பல பயனர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். "உங்களிடம் பணிபுரியும் டெலிவரி பசங்களால் இந்த விலையுயர்ந்த ட்ரையம்ப் பைக்கை வாங்க முடியுமா? உணவு டெலிவரி செய்ய நீங்கள் கொடுக்கும் பணத்தில் அவர்களால் அன்றாட செலவை நிர்வகிக்க முடியுமா" என்று ஒரு பயனர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒரு சிலர் தீபிந்தர்கோயலை "உண்மையான உத்வேகம்" என்றும் பாராட்டி உள்ளனர். A post shared by Deepinder Goyal (@deepigoyal) கடந்த மாதம் ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான Zomato நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை மக்கள் அதிகாரி அக்ரிதி சோப்ரா சில தனிப்பட்ட காரணங்களால் அவரது பதவியை ராஜினாமா செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தீபிந்தர் கோயல் இந்த பதிவை மேற்கொண்டுள்ளார். Zomato நிறுவனத்தில் முக்கிய அதிகாரியாக இருந்த அக்ரிதி சோப்ரா கடந்த ,மாதம் செப்டம்பர் 27ம் தேதி ராஜினாமா செய்தார். Zomato நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய அவர் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது இணை நிறுவனராக இருந்த சோப்ரா, Zomato-வின் சட்ட மற்றும் நிதி குழுக்களை அமைப்பதிலும் அளவிடுவதிலும் முக்கிய பங்கு வகித்தார். மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? இணையவாசிகளை உருக வைத்த வைரல் வீடியோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.