TAMIL

லக்ஷ்மிநாராயண யோகத்தால் பணத்தில் புரளப்போகும் ராசிகள்! சுக்கிரனும் புதனும் இணைந்தால்? ராஜயோகம் தான்...

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அதன் இயக்கத்தை மாற்றுகிறது. கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். இது சிலருக்கு அசுபமாகவும், சிலருக்கு சுபமாகவும் இருக்கும். 12 ராசிகளுக்குள் தான் 9 கிரகங்களும் மாறி மாறி இயங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், ஒரே ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்கும்போது சில யோகங்களும், தோஷங்களும் உருவாகின்றன. அவை, சிலருக்கு நல்லதாக இருந்தால், சிலருக்கு பாதகமானதாக இருக்கும் துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி அக்டோபர் 10 ஆம் தேதி புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது. கிரகங்களின் இளவரசன் புதன் காலை 11.25 மணிக்கு துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாமில் சுக்கிரன் சுகத்தை அனுபவிக்கும் ஆசியைக் கொடுக்கும் சுக்கிரன் தன் மூல திரிகோண ராசியான துலாம் ராசியில் தற்போது இருக்கிறார். அவர், அக்டோபர் 13-ம் தேதி வரை துலாம் ராசியில் இருப்பார். லக்ஷ்மி நாராயண யோகம் துலாம் ராசியில் அக்டோபர் 10-ம் தேதி புதன் செல்லும்போது, ஏற்கனவே அங்கே இருக்கும் சுக்கிரனுடன் புதனும் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். இந்த யோகம் 5 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். யோகத்தால் பலனடையும் 5 ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்... மிதுன ராசி லாப ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாவதால், புதன், சுக்கிரனுடன் இணையும் இந்த காலத்தில் தொழில் செய்பவர்களுக்கு ராஜயோகம் தான். தொழில் மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணை மனமகிழ்ச்சியைக் கொடுப்பார். மேலும் படிக்க | குரோதி ஆண்டின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி வழிபாடு! துணிச்சலுடன் கூடிய அறிவு கிடைக்கும் நாள்! சிம்மம் ராசி லக்ஷ்மி நாராயண யோகத்தால் சுபமான பலன்களே பெறுவீர்கள், சிம்மத்தினர் மற்றவர்களை அனுசரித்துச் சென்றால் குடும்பத்திலும், பணியிடத்திலும் தேவையற்ற தொல்லைகள் எழாது. மற்றபடி பண வரத்து, மனமகிழ்ச்சி, தொழில் ஆதாயம் என அனைத்திற்கும் இந்த யோகம் வழிவிடும். கன்னி புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் கன்னி ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அன்னை லட்சுமியின் அருளால் வாழ்க்கையில் இன்பங்கள் பெருகும். செலவுகள் குறையும். விருச்சிகம் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து அவ்வப்போது நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்ததல்லவா? இப்போது, லக்ஷ்மி நாராயண யோகத்தால், வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். துலாம் ராசி சுக்கிரன் மற்றும் புதன் கிரகங்களின் அமைப்பானது சாதகமன பலன்கள் கிடைக்க வழி செய்யும். திருமண முயற்சிகள் நிறைவேறும், சுப காரியம் நடக்கும். ம்னதில் இருந்த கவலைகள் தொலைந்தோடும், குடும்பத்தில் கலகலப்பு கூடும். நிலுவையில் இருந்த பணங்கள் வந்து சேரும். மொத்தத்தில் சுக்கிரனும் புதனும் இணைவதால் துலாம் ராசிக்கு டபுள் ஜாக்பாட் தான். (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - News இதற்கு பொறுப்பேற்காது.) மேலும் படிக்க | புரட்டாசி சனியில் அன்னை வாராகியை வழிபட்டால் சனிதோஷங்கள் நீங்கும்... வாராஹியை எப்படியெல்லாம் வழிபடலாம்? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.