TAMIL

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் 2 மாதங்களுக்கு ஓஹோவென கொடிகட்டி பறக்கப் போகும் ராசிகள்!

கர்ம வினைகளுக்கு ஏற்ப நற்பலன்களையும் தீயபலன்களையும் கொடுக்கும் சனிபகவான் தற்போது நட்சத்திர மாற்றம் செய்திருக்கிறார். அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும் கிரகங்களின் சஞ்சார மாற்றங்களில் சனீஸ்வரரின் மாற்றம் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அந்த வகையில் அக்டோபர் 3 ஆம் தேதி ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார் சனி பகவான். சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனியின் நட்சத்திர மாற்றம் 3 ராசிகளுக்கு மிகவும் சாதகமானதாகவும், 4 ராசிகளுக்கு சுமாரானதாகவும், பிற ராசிகளுக்கு மோசமானதாகவும் இருக்கும். அக்டோபர் முதல் வாரம் முதல் டிசம்பர் வரை மகத்தான வெற்றியைப் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். ரிஷபம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் நன்மை பயக்கும். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும். ரிஷப ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். கடின உழைப்பால் மட்டுமே வெற்றியை அடைவீர்கள் என்பது வருத்தமாக இருந்தாலும், அதுதான் பெருமை தரக்கூடியது என்பதை உணர்வீர்கள். ஆன்மீகம் மற்றும் சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலம் இது. வேலையில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். மேலும் படிக்க | குரோதி ஆண்டின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி வழிபாடு! துணிச்சலுடன் கூடிய அறிவு கிடைக்கும் நாள்! துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் சாதகமாக கருதப்படுகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மனவருத்தங்கள் எல்லாம் நீங்கும் காலம் இது. வாழ்க்கையில் நேர்மறையான உத்வேகம் பெறும் காலம் இது. வாழ்க்கையில் மாற்றங்களைக் காணலாம். காதல் வாழ்க்கைக்கும் நேரம் நன்றாக இருக்கும். சமூகத்திலும் மரியாதை பெறுவீர்கள். தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு வேலையில் உற்சாகம் பிறக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்ப உறவுகள் வலுவடையும் அதே நேரத்தில் புதிய சொந்தம் வந்து சேரும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். காதல் வாழ்க்கை இனிக்கும். வாழ்க்கையிலும், உறவுகளிலும் நல்ல மற்றும் புதிய மாற்றங்கள் ஏற்படும். (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - News இதற்கு பொறுப்பேற்காது.) மேலும் படிக்க | புரட்டாசி சனியில் அன்னை வாராகியை வழிபட்டால் சனிதோஷங்கள் நீங்கும்... வாராஹியை எப்படியெல்லாம் வழிபடலாம்? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.