TAMIL

அக்டோபர் மாத ராசிபலன்கள்: மீன ராசிக்காரர்களுக்கு இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

October Month Pisces Astrology In Tamil: மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் உங்கள் ராசிநாதனான குருபகவான் வக்கிரமாக போகிறார். ஏற்கனவே சனி பகவான் வக்கிரம் பெற்றுள்ளார். எனவே இரண்டு கிரகங்கள் வக்கிரமாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. உங்க ராசிநாதனான குருபகவான் மூன்றாம் இடத்தில் போய் மறைந்திருக்கிறார் ராசிநாதன் மறைவது நல்லது இல்லை. சனி பகவானும் 12 ஆம் இடத்தில் இருக்கார். இதன் காரணமாக ஏழரை சனியில் விரைய சனியாக இருந்து கொண்டிருக்கிறது. மீனம் ராசியில் ராகு உங்க ராசியில் ராகு உட்கார்ந்து இருக்கார். சர்ப்ப கிரகம், பாம்பு கிரகம் என்று சொல்லக்கூடிய ராகு உங்க ராசியில் ஜென்ம ராகுவாக இருக்கிறது. அதனால் உங்களுக்குள் பிரம்மாண்டமான ஆசையை வளர்க்கக்கூடிய தூண்டுதல் ஏற்படும். எனவே ஆசையை அதிகமாக வளர்த்து பிரச்சனைகளில் சிக்கிக்க கூடாதுங்கிறதை என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்து செயல்படணும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு செயலாற்றுங்கள். மீனம் ராசியில் சூரியன் ஆறாம் அதிபதியாக இருக்கக்கூடிய சூரியனும், உங்கள் ராசியை பார்க்கிறது. கடன், நோய், எதிர்ப்பு, பகை, வம்பு, வழக்கு என்பதைக் குறிக்கக்கூடிய சூரியனும் உங்க ராசியை பார்க்கிறார். விரைய சனியாகவும் இருக்கிறது. ஜென்மத்தில் ராகு அமைந்துள்ளார். இந்த அமைப்பு இருக்கும்போது குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கணும். எடுத்தோம் கவுத்தோம் என செயல்படக் கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலே போதும் பெரிய பாதிப்பை எதுவும் ஏற்படாது. தனத்தில் குறைவு இருக்காது தனம் சார்ந்த விஷயம் குடும்பம் சார்ந்த விஷயம் வாக்கு சம்பந்தப்பட்ட விஷயம் எப்படி இருக்கும்னு பார்க்கும் பொழுது தனஸ்தானத்தின் அதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் மூன்றாம் இடத்தில் தான் உட்கார்ந்து இருக்கார். இதனால் நன்மையே. தனத்தில் எந்த குறைவு கொடுக்கப் போவதில்லை. தனஸ்தானாதிபதிக்கு வீடு கொடுத்த அந்த புதன் பகவான் ஆட்சி பலத்தோட வலிமையா இருக்கிறார். இந்த மாதம் 20 ஆம் தேதி வரை தனத்துக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால் 20 ஆம் தேதிக்கு அப்புறம், செவ்வாய் பகவான் நீச்சமாகிறார். நீச்சம் அப்படின்னா தியானத்தில் இருப்பதைப் போல வலு குறைகிறது. அந்த சமயத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சனி பகவான் இருப்பதால் எச்சரிக்கை மறுபுறம் சனி பகவானும் விரைய ஸ்தானத்திலிருந்து தனது மூன்றாம் பார்வையாக தனஸ்தானத்தை பார்ப்பதால், மாதத்தின் பிற்பகுதியில கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும். யாருக்கும் கொடுத்து ஏமாறக்கூடாது. யாருக்கு ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. பண விஷயத்தில் கரெக்டா இருக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம்? குடும்ப விஷயத்தில் கூட கணவன் மனைவி கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரணையோடு நடந்துக்கொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயங்கள்ல கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கு விட்டுக்கொடுப்பது, மனைவி கணவனுக்கு விட்டுக்கொடுப்பது. நம்ம குடும்பம் என மனதில் வைத்து செயல்பட்டால் உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை. மேலும் படிக்க | Today Horoscope | இன்று நவராத்திரி. . இந்த ராசிக்கு பணம் வரவு, காதல் கைகூடும்! பேசும் போது கவனம் எச்சரிக்கை தேவை அதே சமயத்தில் வாக்கு சார்ந்த விஷயத்திலும் கரெக்டா இருக்க வேண்டும். எதை பேசணுமோ, அதை மட்டும் பேச வேண்டும். தேவையில்லாதவற்றை பேசக்கூடாது. ஏனென்றால் ராகு அங்க உட்கார்ந்து இருக்கார். ஏழாம் இடத்தில் கேது உட்கார்ந்து இருக்கிறார். இந்த ராகு, கேதுக்கள் இந்த லக்னத்திலும் ஏழாம் இடத்தில் இருக்கின்ற காரணத்தாலும், சனி பகவான் வாக்கு என்ற இடத்தை பார்ப்பதால், நீங்க நல்லதே பேசினாலும் அந்த இடத்தில் ஒரு குறை சொல்லி உங்களை ஒரு குற்றவாளி ஆக்கக்கூடிய தன்மையை உருவாக்கிவிடும். எனவே பேச்சு விஷயத்தில் கவனம் எச்சரிக்கை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வீடு, வாகனம் வாங்கலாம் செவ்வாய் நான்காம் இடத்தில் இருக்கார். வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு தடை ஏதும் கிடையாது. நான்காம் இடத்தில் செவ்வாய் உட்கார்ந்து இருக்கார். புதன் ஆட்சி பலத்தோடு உட்கார்ந்து இருக்கிறார். அதேசமயம் இந்த மாதத்தினுடைய பிற்பகுதியில் கொஞ்சம் கவனமாக இருக்கணும். நான்காம் அதிபதியாக இருக்கக்கூடிய புதன் பகவான் எட்டில் போய் மறைகிறார். அப்போ டாக்குமெண்ட் விஷயத்தில் கவனம் எச்சரிக்கையா இருக்கணும் வண்டி வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. நல்ல குட் நியூஸ் காத்திருக்கு உங்களுக்கு யாரெல்லாம் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்களோ, யாரெல்லாம் எதிர்ப்பு தன்மை கொடுத்தார்களோ, அவர்கள் எல்லாம் இந்த மாதம் விலகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய இஷ்ட தெய்வம் குல தெய்வத்தினுடைய அருளால் இதுவரைக்கும் நீங்கள் வணங்கி வந்த தெய்வத்தினுடைய அருளால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். ஒரு நல்ல குட் நியூஸ் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளாக இந்த காலகட்டம் இருக்கிறது. ஏழரை சனி பணியிடத்தில் எச்சரிக்கை வேலை சார்ந்த விஷயத்தில் மட்டும் எச்சரிக்கையோடு இருக்கணும். ஏழரை சனியில் விரைய சனியாக இருக்க போகிறீர்கள். அடுத்து வருவது ஜென்ம சனியாக இருப்பதானால் திருப்தியை தராது. வேலையில் திருப்தியை தராது என்பதால், புத்திசாலித்தனமாக செயல்பட என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதத்தினுடைய பிற்பகுதியில் ஒரு மாற்றத்தை தரக்கூடிய அமைப்பு ஏற்படும். லாபஸ்தானம் அனுக்கிரகம் குருபகவான் வக்கிரமடைந்து 11 ஆம் இடமான லாபஸ்தானத்தை பார்க்கிறார். உங்க ராசி அதிபதி லாபஸ்தானத்தை பார்க்கிறதும், பாக்கியத்தை பார்ப்பதும் ஒரு வகையில் உங்களுக்கு அனுக்கிரகம் என்பது நிச்சயமாக உண்டு. கௌரவங்கள், புகழ், பதவி கிடைக்கக்கூடிய தன்மை என்பது இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். எல்லாருக்கும் ஒரே பலனா? இந்த அக்டோபர் மாதத்தில் பொதுவான பலன்கள் இந்த ராசிக்கு இல்லை. இந்த ராசியில் பல கோடிக்கணக்கான பேர் இருப்பீர்கள். எல்லாருக்கும் ஒரே பலன் கிடைக்குமா? என்றால் நிச்சயமா இல்லை. ஏன்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொருடைய ஜாதக அமைப்புகளும் தசாபுத்திகளும் மாறுபடும். அதற்கு தகுந்த மாதிரி பலன்களும் மாறுபடும். பொறுப்புத் துறப்பு இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. NEWS இதற்கு பொறுப்பேற்காது. மேலும் படிக்க | சக்தியைக் கொண்டாடும் நவராத்திரி வந்தாச்சு! கோலகலமாய் கொலுப்படிகளை அமைக்க ஏற்ற நேரம்? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.