TAMIL

விலகும் சமாஜ்வாதி... அதிர்ச்சியில் எதிர்க்கட்சி கூட்டணி - காரணம் யார் தெரியுமா?

National News Latest Updates: ஆளும் பாஜக கூட்டணிக்கு தொடர் முன்னேற்றமும்... காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொடர் பின்னடைவும் ஏற்பட்டு வருவதை கடந்த சில மாதங்களாகவே கண்டு வருகிறோம். ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸின் எதிர்க்கட்சி கூட்டணி பாஜகவுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக எவ்வித சிரமமும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பெரிய வெற்றிகளை குவித்தாலும் அவர்களால் இன்னும் பாஜகவின் கூட்டணியை வீழ்த்த முடியவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. பாஜகவும் இந்த முறை கூட்டணி ஆட்சியையே மத்தியில் அமைத்திருக்கிறது. அந்த வகையில், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இந்தியா கூட்டணி ஒற்றை கட்சியின் தலைமையிலோ, ஒற்றை தலைவரின் கீழோ இயங்காமல் கூட்டு தலைமையின் கீழே இயங்கியது. இது தங்களின் பலமாக எதிர்க்கட்சிகள் கருதினாலும், ஒருவருக்கு கீழ் மற்றொருவர் இயங்க விருப்பமில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக்கு தலைமையாக இருக்கக்கூடாது என்பதிலும் பிற கட்சிகள் கவனமாக செயல்படுகிறது என்றும் ஆளும் பாஜக சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கூட்டணியில் இருந்து விலகும் சமாஜ்வாதி இது ஒருபுறம் இருக்க, மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான சமாஜ்வாதி விலகுவதாக அறிவித்துள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி, பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக பேசியதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் படிக்க | கூலித் தொழிலாளர் குழந்தைகளுக்கு ரூ.51,000 கல்வி உதவித்தொகை வழங்கும் மாநில அரசு..! இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் அபு ஆஸ்மி இந்தியில் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி தனித்து இயங்க விரும்புகிறது. குறிப்பாக, மகா விகாஸ் கூட்டணி, UBT சிவசேனா கட்சியின் வகுப்புவாத சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக மாறுவதை அது ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது" என்றும் பதிவிட்டுள்ளார். காரணம் இதுதான்... உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி நாளிதழில் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விளம்பரம் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சமாஜ்வாதி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளரும் X தளத்தில் மசூதி இடிப்பை பாராட்டி பதிவிட்டிருந்தர் என்றும் இதனால் நாங்கள் மகா விகாஸ் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்றும் அபு ஆஸ்மி தெரிவித்தார். pic.twitter.com/3nZYC4EK0e — Milind Narvekar (@NarvekarMilind_) December 5, 2024 குறிப்பாக, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவின் செயலாளரும், மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினருமான மிலிந்த் நர்வேகர் அந்த நாளிதழ் விளம்பரத்தை குறிப்பிட்டு, இதை யார் செய்தார்களோ அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் என அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை குறிப்பிட்டுதான் அபு ஆஸ்மி இந்த கருத்தை முன்வைத்தார். "இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தால் மகா விகாஸ் கூட்டணியில் இருக்கும் நமக்கும், பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்" எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி பெரியளவில் வாக்கு வங்கியை வைத்திருக்காவிட்டாலும், தேசியளவில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. மக்களவை தேர்தலின்போது உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு இணையாக இந்தியா கூட்டணியையும் வெற்றிபெற வைத்ததில் சமாஜ்வாதி கட்சிக்கு பெரிய பங்குண்டு. அந்த வகையில், மகா விகாஸ் கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி விலகியிருப்பது தேசியளவில் இந்தியா கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் படிக்க | கொல்கத்தாவில் கொடூரம்! 7 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.