TAMIL

அரியணை ஏற காங்கிரஸ் போட்ட முக்கிய வியூகம்... குஷியில் ராகுல் காந்தி - ஹரியானா முதல்வர் பதவி யாருக்கு?

Haryana Assembly Election 2024: மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்கள் என்பதால் ஹரியானா மீதும், ஜம்மு காஷ்மீர் மீதும்தான் தற்போது நாடு முழுக்க அரசியல் ஆர்வலர்களின் கவனமும் உள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகளாகும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், கடந்த 10 வருடங்களாக ஹரியானாவில் ஆட்சியில் இருந்த பாஜக, தற்போது அதன் அரியணையில் இருந்து இறங்கப்போவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றப் போகும் குஷியில் உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதது ஒருபுறம் என்றால் காங்கிரஸ் 100 தொகுதிகளுக்கு நெருக்கமாக வெற்றி பெற்றது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி நாடு முழுக்க வெற்றியை குவித்தது. இருப்பினும், ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மையில்லாத காரணத்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது. இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை தேர்தல் பெரும் ஊக்கத்தையும், ஓரளவுக்கு பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் வழங்கி உள்ளது. கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமாக தோல்வியை சந்தித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹரியானாவில் காங்கிரஸ்...? தற்போது மக்களவை தேர்தலை தொடர்ந்து ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்பட்சத்தில் நிச்சயம் அந்த மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் பெரும் உத்வேகம் உண்டாகலாம். இந்தாண்டின் இறுதியில் நடைபெறும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் சிறப்பாக செயலாற்றவும் இது ஊக்கமளிக்கலாம். ஜாட் சமூகம், தலித் சமூக மக்களின் பெரும்பான்மையான ஆதரவு காங்கிரஸ் பக்கமே இருந்தது. ராகுல் காந்தி யின் திட்டமிட்ட பிரச்சாரம் மற்றும் கள செயல்பாடு ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலன்களை வழங்கலாம். ஹரியானாவின் வெற்றி அடுத்து 2027ஆம் ஆண்டில் பஞ்சாப்பை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கு பேரூதவியாக இருக்கும். மேலும் படிக்க | ஹரியானாவில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்? ஜம்மு காஷ்மீரில் காத்திருக்கும் ட்விஸ்ட்? - கருத்துக்கணிப்பு முடிவுகள் அதேபோல், தேசிய தலைநகர் டெல்லிக்கு மிக அருகில் ஹரியானா அமைந்துள்ளதால் மத்திய அரசுக்கு எதிராக ஒருவேளை மீண்டும் விவசாயம் ஒன்றுகூடும்பட்சத்தில், ஹரியானா மாநில அரசின் ஒட்டுமொத்த ஆதரவு விவசாயிகளுக்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியையும் வழங்கும். ஹரியானா முதல்வர் யார்? ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 44 முதல் 61 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 46 தொகுதிகளை கைப்பற்றினாலே காங்கிரஸ் ஆட்சியமைத்துவிடும் என்றாலும், யாரை முதல்வராக காங்கிரஸ் நியமிக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது களத்தில் சிறப்பான வியூகமாக அமைந்துள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவர்களில் ஒருவரான குமாரி செல்ஜா, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வராக இருந்த பூபேந்திர ஹூடா ஆகியோர் முதல்வர் ரேஸில் முன்னணியில் உள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் மேல்மேட்ட தலைவர்களே முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று பூபேந்திர ஹூடா தெரிவித்துள்ளார். இதில் குமாரி செல்ஜா காங்கிரஸ் மேலிடத்தின் தேர்வாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் மற்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறாகவும் போகலாம் என்பதால் வரும் அக். 8ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வரை நாம் காத்திரு்கக வேண்டியது அவசியமாகிறது. மேலும் படிக்க | 3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்... மகாராஷ்டிராவில் ஷாக் - பின்னணி என்ன? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.