TAMIL

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சிறப்பு சலுகை - அமைச்சர் விளக்கம்

Senior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்த விளக்கத்தில், ரயில் பயணிகளுக்கு ரயில்வே தொடர்ந்து சலுகை அளித்து வருகிறது என தெரிவித்தார். இருப்பினும், ரயில்வே டிக்கெட் மானியங்கள் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார். சமீபத்திய புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட 6% மானியங்களை மத்திய அரசு குறைத்துள்ளது. ரயில்வே டிக்கெட் மானியங்கள் நிறுத்தப்பட்டது குறித்து மதிமுக எம்பி துரை வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதில் பத்திரிக்கையாளர்கள், மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட மானியங்கள் திரும்ப வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பயணிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய வகையில் இந்திய ரயில்வே தொடர்ந்து மானியக் கட்டணங்களை வழங்கி வருவதாக தெரிவித்தார். " ரயில்சேவை வழங்குவதற்கான செலவு 100 ரூபாயாக இருக்கும் போது, ​​47 சதவீத மானியமாக, 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறோம். விளையாட்டு வீரர்களும் இந்த மானியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது, டிக்கெட் விலையை வைத்து, 56,993 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அனைத்து விதமான பயணிகளுக்கும் ரயில்வே மானியம் கொடுக்கிறது." என தெரிவித்தார். மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா? நாடாளுமன்றத்தில் விளக்கிய ரயில்வே அமைச்சர் இதற்கு முன்பு ரயில்வே மானியமாக 53 விழுக்காடு வழங்கி வந்த நிலையில், அதனை 47 விழுக்காடாக குறைத்திருக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் போன்ற சில பிரிவினருக்கான சலுகைகள் தொடரும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். "மாணவர்கள் மற்றும் நோயாளிகள் போன்ற பல பிரிவினருக்கு ரயில்வே கொடுக்கும் மானியம் தொடர்ந்து கொடுக்கப்படும். அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை." என்றும் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்திய ரயில்வே மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு சலுகைகளை நிறுத்தியது. முன்னதாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40% தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் மூத்த குடிமக்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற முதன்மை சேவைகள் உட்பட அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களிலும் 50% தள்ளுபடி அளிக்கப்பட்டது. இந்த சலுகைகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, மூத்த குடிமக்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் வைஷ்ணவ், "சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் மலிவு விலையில் சேவைகளை வழங்க இந்திய ரயில்வே பாடுபடுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு 56,993 கோடி ரூபாய் மானியம் வழங்கியது. இது ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக 46 சதவீத சலுகையாகும். ரயில்களில் இந்த மானியம் தொடர்கிறது. ஆனால் மேற்கொண்டு மூத்த குடிமக்கள், பத்திரிக்கையாளர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக எந்த பரிசீலனையும் அரசிடம் இல்லை" எனத் தெரிவித்தார். மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது, இது இந்த விஷயத்தில் பரவலான மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. இருப்பினும், கொள்கையை மாற்றியமைப்பது குறித்து அரசாங்கத்திடம் இருந்து எந்த அறிகுறியும் இல்லை. மேலும் படிக்க | Railway Super APP : இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி, 2 நிமிடத்தில் ரயில் டிக்கெட் கன்பார்ம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.