TAMIL

ஆயுதபூஜை விஜயதசமியில் கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி! புதுக் காருடன் தீபாவளி கொண்டாட ரெடியா?

பண்டிகைக் காலம் களைகட்டியுள்ள நிலையில், தள்ளுபடி விற்பனைகள் தூள் பறக்கின்றன. நவராத்திரி தொடங்குவதற்கு முன்னரே தொடங்கிய தள்ளுபடி சலுகைகள் அக்டோபர் மாதத்தில் வரும் ஆயுதபூஜையை குறிவைக்கின்றன. பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதிரடியான சலுகை விலையில் கார்களை விற்கின்றன. தீபாவளிக்கு முன்னதாக வரும் ஆயுதபூஜையன்று இயந்திரங்கள், கார்கள் என கருவிகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் இந்தியர்களிடையே உள்ளது. அதிலும், நவராத்திரி நாட்களில் புதிய பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும். திட்டமிட்டு பொருள் வாங்குபவர்களும் நவராத்திரி, விஜயதசமி மற்றும் தீபாவளிக்காக காத்திருப்பார்கள். ஏனென்றால், முன்னணி நிறுவனங்கள் உட்பட அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பண்டிகைக் காலத்தில் சிறப்பு தள்ளுபடியை வழங்கும். அந்த வகையில், 2024ம் ஆண்டு நவராத்திரி தொடங்கிவிட்டது, அதனுடனே கார்கள் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான பம்பர் சலுகைகளும், , தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் தள்ளுபடி சலுகைகள் தொடங்கிவிட்டன. கார் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவு சலுகைகளை கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துவிட்டனவா? தெரிந்துக் கொள்வோம்... தீபாவளி கார் தள்ளுபடி பின்னணி கார் நிறுவனங்கள் மற்றும் டீலர்ஷிப்கள் பெரிய தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன. இந்த சமயத்தில் கார் வாங்கினால், அது லாபகரமானதாக இருக்கும். எந்த கார் என்ன விலைக்குக் கிடைக்கும்? தெரிந்து கொள்ளுங்கள்... மேலும் படிக்க | எந்த நிறுவனத்தின் ஃபைபர் திட்டம் மிகவும் மலிவானது? ஏர்டெல் Vs ஜியோ! இல்லை பிஎஸ்என்எல்! டாடா சஃபாரி (Tata Safari) – SUV காரான டாடா சஃபாரி காருக்கு ₹1.65 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது, MY2023 மாடலில் கூடுதலாக ₹25,000 ரொக்க தள்ளுபடியும் கிடைக்கும். கியா செல்டோஸ் (Kia Seltos) - ₹ 1.3 லட்சம் வரை தள்ளுபடியில் கியா செல்டோஸ் காரை வாங்கலாம். பண தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஆக்சஸரீஸ் பேக்கேஜ் ஆகியவை கொண்ட தள்ளுபடி சலுகை இது. மாருதி கிராண்ட் விட்டாரா (maruti grand vitara) - நடுத்தர அளவிலான மாருதி கிராண்ட் விட்டாரா எஸ்யூவியில் ₹ 1.28 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். எம்ஜி ஹெக்டர் (mg hector) - எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் ₹ 2 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும், இது பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு வகை கார்களுக்கும் பொருந்தும். மஹிந்திரா XUV400 (mahindra) - மின்சார எஸ்யூவியான மஹிந்திராவின் இந்த காருக்கு ₹ 3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. மாருதி ஜிம்னி (maruti jimny) - இந்த 4x4 எஸ்யூவிக்கு ₹ 2.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும் இந்த பண்டிகைக்கால தள்ளுபடிகள், பண்டிகையை மட்டுமல்ல, பயண அனுபவத்தையும் மகிழ்ச்சியானதாக மாற்றும். மேலும் படிக்க | 9 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு & 100 எஸ்எம்எஸ்! ஆச்சரியப்படுத்தும் BSNL! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.