Governor RN Ravi Latest News Updates: வள்ளலார் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சி இன்று (அக். 5) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி (TN Governor RN Ravi),"வள்ளலார் வழியில் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கிறார் பிரதமர் மோடி (PM Narendra Modi). அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான ரயில் பாதை என பல்வேறு விஷயங்களை மோடி செய்கிறார். கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தது ஜீவகாருண்யம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு கூட வள்ளலார் வழியில்தான். அனைவரும் ஒன்று என்பதைத்தான் சனாதான தர்மம் சொல்கிறது. சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் என்ற கருத்து வேறுபாடு இல்லை. இதில் சிலர் வேறுபாடு காட்டி குளிர்காய் நினைக்கிறார்கள். அதற்கான அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை சாதியுடன் தொடர்புபடுத்தி தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர். 'வள்ளலார் ஒரு அவதாரம்' ஆங்கில ஆக்கிரமிப்பால் யாது ஊரே யாவரும் கேளீர் என்ற நமது தத்துவ குடும்ப வாழ்வு சிதைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் வள்ளலார் பெருமான் அவதரித்தார். நமது அடையாளத்தையும் தர்மத்தையும் இழந்து இருந்த காலத்தில் ஒருங்கிணைத்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி ஏற்ற தாழ்வு நிலையை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தவர் வள்ளலார். தமிழ்நாட்டில் பல அவதார புருஷர்கள் அவதரித்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் பிரிந்திருந்த மக்களை ஒருங்கிணைத்து சென்றுள்ளனர். அதனால் தான் பாரதத்தின் புண்ணிய பூமி தமிழ்நாடு, ஆன்மீக பூமி தமிழ்நாடு. என்றைக்கும் இல்லாத போன்று இன்று இன்றைய நாளில் வள்ளலாரின் தேவை உலகத்திற்கு அதிகமாக தேவைபடுகிறார். அந்த அளவு உலகம் பிரிந்து கிடக்கின்றது. இந்தியாவில் மகாராஷ்ராவிற்கு பிறகு தமிழகத்தில் தான் அதிகப்படியான தற்கொலைகள் நடக்கின்றது. பல மக்கள் போரால் கொலை செய்யப்படுகின்றனர், ஆனால் வழிகாட்டுதல் இல்லாததால் மன அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர். சனாதன தர்ம பிரச்னை ஏற்கனவே ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் (Pawan Kalyan) சனாதானத்தை யாராலும் அழிக்க முடியாது என பேசியதும் தமிழக துணை முதல்வர் உதயநிதி அதற்கு 'லெட்ஸ் வெயிட் அண்ட் சி' (Let's Wait And See) தெரிவித்திருந்தது தமிழக அரசியலில் மீண்டும் சனாதனம் குறித்த பேச்சுக்களை (Sanatana Dharma Issue) கிளப்பியது. இந்ந நிலையில் ஆளுநர் மீண்டும் சனாதனம் குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க | சென்னை : நாளை விமான சாகச நிகழ்ச்சி, போக்குவரத்து மாற்றம் - பார்க்கிங் விவரம் உதயநிதி vs பவன் கல்யாண் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதை தொடர்ந்து, ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த விவகாரத்தில் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசுதான் இதற்கு பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும் துணை முதல்வர் பவன் கல்யாண் லட்டு விவகாரத்தால் தோஷம் எழுந்துள்ளதாகவும், எனவே அதற்காக 11 நாள்கள் விரதம் இருந்து திருப்பதியில் தரிசனம் மேற்கொள்வேன் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில், விரதத்தை முடித்து தரிசனம் செய்த பின்னர் திருப்பதியில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள் என்று உதயநிதி ஸ்டாலினை (Udhayanidhi Stalin) மறைமுகமாக தாக்கி பேசினார். கடந்தாண்டு செப்டம்பரில் சனாதனம் கொசு, மலேரியா, டெங்குவை போன்றது, அவற்றை ஒழிக்கக் கூடாது, அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியிருந்தது வலதுசாரிகளால் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டே பவன் கல்யாண் உதயநிதியை தாக்கிப் பேசினார். இதற்கு உதயநிதி பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலடி கொடுத்துள்ளார். வள்ளலார் பிறந்தநாள்: முக ஸ்டாலின் வாழ்த்து முன்னதாக, வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 201ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (TN CM MK Stalin) அவரது X தளத்தில்,"நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "தனிப்பெருங்கருணை நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று... நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, " #தனிப்பெருங்கருணை_நாள் " எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று! "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!" "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை… pic.twitter.com/yPhNg4RwLd — M.K.Stalin (@mkstalin) October 5, 2024 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!', 'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!' என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்! வாழ்க வள்ளலார்" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | ஒரே நாளில் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி.. காரணம் என்ன? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?
- By Sarkai Info
- December 20, 2024
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- By Sarkai Info
- December 20, 2024
Spotlight
Today’s Hot
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்
- By Sarkai Info
- December 20, 2024
ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!
- By Sarkai Info
- December 20, 2024
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!
- By Sarkai Info
- December 20, 2024
Featured News
Latest From This Week
நெல்லையில் சாதி வன்ம படுகொலை? நீதிமன்ற வாசலில் துடிதுடித்து இறந்த இளைஞர் - பரபரப்பு பின்னணி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Budget 2025: அந்த குட் நியூஸ் வருகிறதா? EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்?
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
ஓப்பனரை வீட்டுக்கு அனுப்பிய ஆஸ்திரேலியா... உள்ளே வரும் மாஸ் வீரர் - இந்தியாவுக்கு பெரிய பிரச்னை
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.