TAMIL

ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து... ஜாமின் கிடைத்தும் வேஸ்ட் - அறிவிப்பின் பின்னணி என்ன?

Jani Master National Film Award Suspended: பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது அவரது உதவியாளராக இருந்த பெண்மணி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அந்த பெண் 18 வயதிற்கும் குறைவாக இருந்தபோது ஜானி மாஸ்டர் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தலைமுறைவான நிலையில், பல நாள்கள் தேடலுக்கு பின் அவரை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜானிக்கு ஜாமின் தனுஷ் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே..." பாடலுக்கான சிறந்த நடன இயக்குநர் விருதை ஜானி மாஸ்டரும், சதீஷ் மாஸ்டரும் வென்றிருந்தனர். எனவே, இந்த தேசிய விருது விழா அக். 8ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதையொட்டி, தனக்கு ஜாமின் வழங்கும்படி ஜானி மாஸ்டர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை தொடர்ந்து அவருக்கு அக்.6ஆம் தேதி முதல் அக். 10ஆம் தேதி வரை தற்காலிக ஜாமின் வழங்கி கடந்த அக். 4ஆம் தேதி நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. மேலும், அக்.10ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அவர் சரணடைய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது. தேசிய விருது ரத்து தேசிய திரைப்பட விருது விழாவில் கலந்துகொள்ளவே நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை திரும்பப் பெறுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் தேசிய திரைப்பட விருதுகள் பிரிவு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய திரைப்பட விருதுகள் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,"தேசிய திரைப்பட விருது 2022 ஷேக் ஜானி பாஷாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் குற்றச்சாட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் படிக்க | ஜெயம் ரவியின் 34-வது படத்தை டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு, திருச்சிற்றம்பலம் படத்திற்காக அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதை, மறு உத்தரவு வரும் வரை அதனை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டெல்லி விக்யான் பவனில் அக். 8ஆம் தேதி நடைபெற இருக்கும் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவுக்கான அழைப்பும் ரத்து செய்யப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர் தேசிய விருதையும் பெற முடியாது, அந்த விழாவிலும் பங்கேற்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது. தேசிய திரைப்பட விருது பிரிவின் அந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது ஜாமினும் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. பெண் வைத்த குற்றச்சாட்டு என்ன? மத்திய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான பெண் அளித்த புகாரின் பேரிலேயே ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். அந்த பெண் ஜானி மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, ஜானி மாஸ்டரை அந்த பெண் 2017ஆம் ஆண்டில் முதன்முதலில் சந்தித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் அவர் துணை நடன இயக்குநர் பொறுப்பை ஜானி மாஸ்டர் வழங்கி உள்ளார். இதனை அந்த பெண்ணும் ஏற்றுள்ளார். அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோதே ஜானி மாஸ்டர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றஞ்சாட்டி உள்ளார். ஜானி மாஸ்டர் இந்த சம்பவத்தை தெரிவித்தால் உடல்ரீதியாக வன்முறைக்கு ஆளாக்குவேன் என மிரட்டியதாகவும், போட்டோஷூட் மற்றும் ஒத்திகையின் போது மனரீதியாக துன்புறுத்துவதாகவும் அந்த 21 வயது பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் படிக்க | 'ஜாதி, மதம்... மனிதர்களை வெறுக்க வைக்கும்...' நடிகர் அஜித் வீடியோ வைரல் - AK பேசியது என்ன? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.