TAMIL

சொந்த குடும்பத்தையே படுகொலை செய்த 20 வயது இளைஞர்! உறைய வைக்கும் சம்பவம்..

Delhi Family Murder : 20 வயது இளைஞர் ஒருவர், ஒரு சயநலமான காரணத்திற்காக ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டியிருக்கும் சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பமே கொலை! தலைநகர் டெல்லியில்தான் இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அர்ஜுன் தன்வர் என்ற 20 வயது இளைஞன், இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளான். டிசம்பர் 4ஆம் தேதியான நேற்று, அர்ஜுனின் தாய்-தந்தைக்கு திருமண நாள். இந்த நாளில், பக்காவாக ப்ளான் போட்டு, தனது குடும்பத்தை இந்த இளைஞர் தீர்த்து கட்டியிருக்கிறார். டெல்லியை சேர்ந்த ராஜேஷ் (51), அவரது மனைவி கோமல் (46), அவரது மகள் கவிதா (23) ஆகியோர் நேற்று அவர்களின் இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கழுத்து அறுபட்ட நிலையிலும், வரும் ரத்தத்தை நிறுத்தும் வகையில், துணியை கழுத்தை சுற்றி இறுக்கப்பட்ட நிலையிலும் இவர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து பிறருக்கு தகவல் கொடுத்ததே, இந்த கொலைகளை செய்த, அர்ஜுன்தான் என்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலைக்கான காரணம் என்ன? அர்ஜுன், டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசறிவியில் படித்து வருகிறார். பயிற்சி பெற்ற பாக்ஸர் ஆன இவர், அதற்கான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, பாக்ஸர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த அர்ஜுனை அவரது தந்தை பொது வெளியில் பலமுறை அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது, அர்ஜுனுக்கு சொல்ல முடியாத அளவிற்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று, அர்ஜுனின் சகோதரி கவிதாவிற்கு பிறந்தநாள். அன்றும் இது குறித்து சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, அர்ஜுன் தனது தந்தையை தாக்கியிருக்கிறார். குடும்ப சொத்துகளை, தனது தந்தை, சகோதரியின் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று நினைத்த அர்ஜுன், அனைவரையும் தீர்த்துக்கட்ட பக்காவாக ப்ளான் போட்டதாக கூறப்படுகிறது. கழுத்தை அறுத்து கொலை..அதை மறைக்க பொய்கள்! தனது குடும்பத்தினர் சத்தம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் அர்ஜுன். முதலில், தனது சகோதரி கவிதாவின் அறைக்கு சென்றிருக்கிறார். அங்கு தன்னை கொலை செய்ய வந்த அர்ஜுனை எதிர்த்து கவிதா சண்டை போட்டிருக்கிறார். இதனால், அவரது உடல்களில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. இவரை கொலை செய்த பின்னர், தனது தந்தை ராஜேஷின் அறைக்கு சென்றிருக்கிறார் அர்ஜுன். அங்கு உறங்கி கொண்டிருந்த ராஜேஷின் அறைக்கு சென்ற அவர் அவரை தலையில் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்திருக்கிறார். இதையடுத்து, கழிவறைக்கு சென்றிருந்த தாய் வெளியில் வந்தவுடன் அவர் எதிர்பார்க்காத நேரத்தில் அவரையும் கொலை செய்திருக்கிறார். மேலும் படிக்க | தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை! கொலையாளி கைது இந்த கொலைகளை தான் செய்யவில்லை என்பதை மறைப்பதற்காக அவர், எப்போதும் காலை 5:30 மணிக்கு, ரன்னிங் சென்றிருக்கிறார். அதன் பிறகு, தனது ஜிம்மிற்கு சென்று தன் குடும்பத்தையே யாரோ கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாேலீஸாரின் விசாரனையின் போது, அர்ஜுன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாற்றி மாற்றி பதிலளித்திருக்கிறார். இதனால், இவர் மீது சந்தேகப்பட்ட போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது, தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் தனிமைப்படுத்த பட்டது போல உணர்ந்த அர்ஜுன், இப்படி ஒரு காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது. அது மட்டுமன்றி, இந்த கொலைகளை எப்படி செய்ய வேண்டும் என இணையத்தில் இவர் தேடியிருப்பதற்கான தடையங்களும் தற்போது கிடைத்திருக்கிறது. இது குறித்த விசாரணை போலீஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க | பல்லடம் : தோட்டத்து வீட்டில் 3 பேர் படுகொலை - கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.